என்னோட ஹெல்த் பிரச்சினைதான் காரணம்.. தக் லைஃப், சூர்யா 43 படங்கள் குறித்து போட்டுடைத்த துல்கர்!
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது சீதாராமம் படம் தெலுங்கில் உருவான நிலையிலும் மற்ற மொழிகளிலும் குறிப்பாக தமிழ் ஆடியன்சையும் மிகச் சிறப்பாக கவர்ந்தது.
இந்நிலையில் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரி மற்றும் இயக்குனருடன் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளை துல்கர் சல்மான் கொடுத்து வருகிறார்.

நடிகர் துல்கர் சல்மான்: நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்களையும் தன்னுடைய கைக்குள் போட்டுக் கொண்டுள்ளார். இவரது படங்கள் எந்த மொழியில் வெளியானாலும் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்று விடுகின்றன. அந்த வகையில் தெலுங்கில் இவர் நடித்த சீதாராமம் படம் தமிழ், மலையாளம் மொழி ரசிகர்களையும் சிறப்பாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருந்த நிலையில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக பேசப்பட்டது. அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது.
லக்கி பாஸ்கர் படம்: முன்னதாக இந்த படத்தை விஜய்யின் கோட் படத்தின் ரிலீசுடன் இணைத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மலையாளத்தில் நடிகர் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ள நிலையில் லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி கோட் படம் மலையாள ரசிகர்களை கவறவில்லை. இந்நிலையில் தற்போது லக்கி பாஸ்கர் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன்களை அடுத்தடுத்து துல்கர் சல்மான் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோடி போட்டிருந்த மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட துல்கர்: இவர்கள் இணைந்து தற்போது அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது பல்வேறு சுவாரஸ்யங்களை துல்கர் சல்மான் பகிர்ந்து வருகிறார். முன்னதாக கமல்ஹாசனுடன் தக் லைஃப் மற்றும் சூர்யாவுடன் சூர்யா 43 படங்களில் துல்கர் சல்மான் இணையவிருந்த நிலையில் அந்தப் படங்களில் இருந்து சில பிரச்சனைகள் காரணமாக துல்கர் சல்மான் விலகினார். அவரின் இந்த முடிவு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இதன் காரணங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தற்போது கூறியுள்ளார்.
படங்களுக்கிடையில் இடைவெளி: உடல்நல பாதிப்பு மட்டுமில்லாமல் தக் லைஃப் மற்றும் சூர்யா 43 படங்களின் பிரச்சினைகள் காரணமாகவும் தன்னுடைய கடந்த படத்திற்கும் லக்கி பாஸ்கருக்கும் இடையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் துல்கர் கூறியுள்ளார். கடந்த ஆண்டில் தான் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு தான் யாரையும் குறை கூற விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய உடல் நிலையை மீண்டும் மேம்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தீபாவளி ரிலீசாக அவரது லக்கி பாஸ்கர் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
தீபாவளி ரேஸில் துல்கர்: தமிழில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் பிளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள நிலையில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் இதில் இணைய உள்ளது. இந்த படங்களில் எந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சிறப்பான விமர்சனங்களை பெறும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











