மகனுக்கு நியூசிலாந்தில் 7,000 ஏக்கர் நிலம்?.. ரஜினியின் நண்பர் அப்படி செய்தாரா?.. நடிகர் விளக்கம்

சென்னை: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு என்ற மகன் இருக்கிறார். தந்தை வழியில் அவரும் சினிமாவில் நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இந்தப் படமானது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் ரஜினிகாந்த் அந்தப் படத்தை பார்த்து விஷ்ணுவை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோலிவுட்டின் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவர் மோகன் பாபு. ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்து வைத்திருக்கும் அவர் அரசியலிலும் நுழைந்தவர். ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பரான மோகன் பாபு இன்றுவரை தனது நட்பை தொடர்ந்துகொண்டிருக்கிறார். மேலும் நாட்டாமை படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து அவரை நடிக்க சொன்னது ரஜினி என்பதும்; அதில் அவரும் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

ஒரே கப்பில் டீ: இரண்டு பேரும் சென்னை சினிமா கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி காலத்தில் ஒருவருக்கொருவர் மிக மிக நட்போடு இருந்தார்கள். பணம் இல்லாத நேரத்தில் ஒரு கப்பில் டீ வாங்கி அதை பாதி பாதியாக குடித்த கதையெல்லாம் உண்டு. இன்றளவும் ரஜினிகாந்த்தை நினைத்த நேரத்தில் பார்ப்பதற்கும், அவரது அறைக்கே சென்று பேசுவதற்கும் மோகன் பாபுவால் மட்டும்தான் முடியும் என்ற பேச்சும் இருக்கிறது.

Actor explains the controversy over Rajinikanth Friend Mohan Babu s purchase of 7 000 acres of land in New Zealand
Photo Credit:

மோகன் பாபுவின் மகன்: மோகன் பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு என்ற மகன் இருக்கிறார். அவரும் டோலிவுட்டில் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது அவரது நடிப்பில் கண்ணப்பா திரைப்படம் உருவாகியிருக்கிறது. புராணங்களில் சிவனின் பக்தராக சொல்லப்படும் கண்ணப்பாவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ஜூன் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

படம் பார்த்த ரஜினி: இந்தப் படத்தை மோகன் பாபுவும், விஷ்ணு மஞ்சுவும் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம்; நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் படமாக்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் கண்ணப்பா படத்தை பார்த்து விஷ்ணுவை பாராட்டினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரொம்பவே எமோஷனலாக போஸ்ட் போட்டிருந்தார் விஷ்ணு.

கிளம்பிய சர்ச்சை: படம் ரிலீஸாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் மோகன் பாபு தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டானது. கண்ணப்பா படத்தில் நடித்திருக்கும் பிரம்மாஜி எடுத்திருந்த அந்த வீடியோவில், "நியூசிலாந்தில் தனது மகன் விஷ்ணு மஞ்சுவுக்கு 7,000 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறேன்' என்று கூறியிருந்தார். அந்த வீடியோ ட்ரெண்டானது மட்டுமின்றி பெரும் விவாதத்தையும் கிளப்பியது.

நடிகரின் விளக்கம்: இந்நிலையில் அந்த வீடியோ குறித்து விளக்கமளித்திருக்கும் பிரம்மாஜி, " மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சுவை வைத்து நன் வெளியிட்டிருந்த வீடியோ ஜாலிக்காக செய்யப்பட்டது. நாங்கள் வழக்கம்போல் ஜோக் அடித்துக்கொண்டு சிரித்தோம். நியூசிலாந்தில் 7,000 ஏக்கர் நிலம் வாங்கியதாக சொன்னது, சொந்தமாக மலை வைத்திருப்பதாக சொன்னது எல்லாம் ஜோக் மட்டும்தான் வேறு எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டார். மேலும், மக்கள் அதை நம்பிவிட்டார்கள். நியூசிலாந்தில் 7,000 ஏக்கர் நிலம் வாங்கு எளிதானத?.. அப்படி எளிது என்றால் வாரா வாரம் அங்கு ஷூட்டிங் வைப்பேன்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X