ஃபகத் பாசிலுக்கு இன்றுடன் 38 வயசு.. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள் !

கொச்சி : மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களிலும் தமிழில் ஒரு சில வெற்றிப் படங்களிலும் நடித்து இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஃபகத் பாசில்.

Recommended Video

Nazriya Pendant Secret | Kushbhu Sundar C Silver jubliee | Anegan Actress with Corona

மலையாள திரைப்படத்துறையில் இன்றளவும் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் போற்றப்பட்டு, இவர் நடித்த பல படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு மலையாள திரைப்படத்துறையின் ஈடு இணையற்ற நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில் ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று தனது 38 வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் தனது குடும்பத்துடன் கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

அசாத்திய நடிப்பு

அசாத்திய நடிப்பு

மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாள நடிகர்களும் இந்திய அளவில் மிகச் சிறந்த நடிகர்களாக போற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் இந்திய அளவில் ஒரு சிறந்த நடிகராக இன்றுவரை தன்னை நிரூபித்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களில் வித்தியாசமான கதை களங்களுக்கு பஞ்சமில்லை என்றபோதிலும் யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத எதார்த்தமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை பல்வேறு மக்களையும் ஆச்சரியப்படுத்தி வரும் அசுர நடிப்பாளர் ஃபகத் பாசில்.

தேசிய விருது

தேசிய விருது

"பாப்பாயுடே ஸ்வந்தம் அப்பூஸ்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஃபகத் பாசில் இன்று வரை தனது ஒப்பற்ற நடிப்பின் மூலம் அசுர நடிகராக பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். அன்னையும் ரசூலும், ஆமென், நார்த் 24 காதம், கும்பலங்கி நைட்ஸ், ட்ரான்ஸ் உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்று வந்த ஃபகத் பாசில் "தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியம்" என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக 65 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த மலையாள நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

ஃபகத் பாசில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் இந்திய அளவில் பல ரசிகர்களால் உற்றுநோக்க பட்டு வரும் நிலையில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நசீம் போன்றோரின் துள்ளலான நடிப்பில் உருவான "பெங்களூர் டேஸ்" திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு மிகப்பெரிய வெற்றி கண்டு வசூலை வாரி குவித்த நிலையில் இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருந்தது. மேலும் இந்த திரைப்படம் பின்னாளில் "பெங்களூர் நாட்கள்" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நேரடி தமிழ் திரைப்படங்களில்

நேரடி தமிழ் திரைப்படங்களில்

இவ்வாறு ஃபகத் பாசில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் விருதுகளுக்கு மட்டுமல்லாமல், வசூலிலும் மிகப்பெரிய சாதனைகளை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது. இவ்வாறு மலையாள திரை உலகின் அசுர நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில் தமிழில் இயக்குனர் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் நேரடி தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

விஜய்சேதுபதியின் நடிப்பில்

விஜய்சேதுபதியின் நடிப்பில்

வேலைக்காரன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்த நிலையில் அதைத்தொடர்ந்து, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி விஜய்சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்

38 வது பிறந்தநாளை

38 வது பிறந்தநாளை

இவ்வாறு மலையாளத் திரையுலகில் தனது அசுர நடிப்பின் மூலம் ஆண்டுக்கொண்டு வரும் நடிகர் ஃபகத் பாசில் ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி மகிழ்வித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X