twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பப்ளிசிட்டிக்காக இந்த நடிகர் செய்த கூத்தை பாருங்க...

    By Siva
    |

    Recommended Video

    நிஜ வாழ்க்கையில் நடித்த ஹீரோ!- வீடியோ

    பெங்களூர்: நடிகர் ஒருவர் கொள்ளை சம்பவம் நடந்ததாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

    நாகவள்ளி vs ஆப்தமித்ரரு என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் கார்த்திக் விக்ரம்(28). இது தான் அவருக்கு முதல் படம். இந்நிலையில் கார்த்திக் பெங்களூரில் உள்ள பசவேஸ்வரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு அவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

    கொள்ளை

    கொள்ளை

    நண்பரை வீட்டில் விட்டு வந்த போது பசவேஸ்வரா நகரில் இருக்கும் வாட்டர் டேங்க் அருகில் 8 பேர் என்னை வழிமறித்து தாக்கினார்கள். என் செல்போன், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் இருந்த பர்ஸ், ஐடி கார்டுகள் மற்றும் என் காருடன் தப்பிச் சென்றுவிட்டனர் என்று கார்த்திக் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    அந்த 8 பேரும் தன்னை தாக்கியதாகவும், காயம் அடைந்த தன்னை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கார்த்திக் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

    விசாரணை

    விசாரணை

    கார்த்திக்கின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது தான் அவர் நாடகமாடியது தெரிய வந்தது. அப்பகுதி மக்கள் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தனர்.

    விபத்து

    விபத்து

    வேகமாக காரை ஓட்டி வந்து சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதியுள்ளார் கார்த்திக். சேதமடைந்த காரை சரி செய்ய பணம் எடுத்து வருவதாகக் கூறி தனது செல்போன் மற்றும் கார் சாவியை பாதிக்கப்பட்ட நபரிடம் அளித்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று வேறு மாதிரி கூறியுள்ளார் கார்த்திக்.

    செல்போன்

    செல்போன்

    பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி கார்த்திக்கின் கார் சாவி மற்றும் செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தார். தற்போது மருத்துவமனையில் இருக்கும் கார்த்திக் குணமாகியதும் அவரிடம் வாக்குமூலம் வாங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்

    விளம்பரம்

    தனது முதல் படத்திற்கு விளம்பரம் தேடவே கார்த்திக் இப்படி நாடகமாடியிருக்கிறார் என்று போலீசார் நம்புகிறார்கள். கொள்ளை நடந்ததாக நாடகமாடிய கார்த்திக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    English summary
    Karthik Vikram, a 28-year-old Kannada actor faked a robbery incident just for publicity in Bengaluru. Police have decided to file a case against him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X