முழுக்க கிராமத்தானாக மாறிவிட்டேன்... தாடி வளர்த்ததன் ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: தான் தாடி வளர்த்ததன் பின்னணியில் உள்ள ரகசியத்தை உடைத்துள்ளார் பிரபல நடிகர்.
அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கணேஷ் வெங்கட் ராம். தொடர்ந்து உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, தனி ஒருவன், நாயகி, 7 நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த படங்களில் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் போலீஸ் கதாப்பாத்திரங்கள் தான். உன்னைப்போல் ஒருவன், இவன் வேற மாதிரி, அச்சாரம், தனி ஒருவன், தொடரி, இணையதளம், 7 நாட்கள் என அவர் நடித்த படங்களில் ஐபிஎஸ் அதிகாரியாகவே நடித்துள்ளார்.

பிக்பாஸில் ஜெனியூன் கேம்
அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்றார் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். இதில் கடைசி வரை யாருடனும் வம்பு சண்டை, கிசுகிசு என இல்லாமல் ரொம்பவே நீட்டாகவும் ஜெனியூனாகவும் விளையாடினார் கணேஷ் வெங்கட்ராம். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாற்று கதாப்பாத்திரத்தில் கணேஷ்
இந்நிலையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் போலீஸ் கதாப்பாத்திரம் மற்றும் மாடர்ன் யூத் கதாப்பாத்திரங்களுக்கு மாற்றாக நடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி முழுக்க முழுக்க கிராமத்து பாணியிலான கதையில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

தாடி வளர்த்ததன் காரணம்
கிராமத்து கதையை மையப்படுத்திய இரண்டு வெப் சீரிஸ்களில் கிராமத்து இளைஞராக நடிக்கிறார். இதுகுறித்து கூறிய கணேஷ் வெங்கட்ராம், கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்தேன். இதற்காகதான் தாடி வளர்த்தேன். முழுக்க என்னைக் கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இரண்டு வெப்சீரிஸ்களில் நடிக்கிறேன்.
Recommended Video

இந்த மாற்றம் அவசியம்..
இந்த வெப்சீரிஸ்களுக்கு பிறகு இயக்குநர்கள் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் யோசித்துப் பார்க்க உதவியாக இருக்கும். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியம். ஒரு கலைஞனுக்கு இந்த மாற்றம் அவசியம்.. இவ்வாறு நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











