கயிற்றால் கட்டப்பட்ட கை.. நீச்சல் குளத்தில் கெளதம் கார்த்திக்.. என்னவா இருக்கும்!

சென்னை: குழந்தைத்தனமான சிரிப்பு நிறைந்த முகம், அசாத்தியமான நடிப்புத் திறமை பெண்களை கொள்ளை கொள்ளும் அழகு என அனைத்து சிறப்புகளையும் கொண்டவர் நடிகர் கௌதம் கார்த்திக். தற்போது இவர் வித்தியாசமான முறையில் நீச்சல் குளத்தில் மூழ்கியபடி இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கியவர் நவரச நாயகன் கார்த்திக். இதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து 80 மற்றும் 90 காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்தார். இவர் 1988ஆம் ஆண்டு சோலைக்குயில் படத்தில் தன்னுடன் நடித்த ராகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கௌதம் கார்த்திக், கையன் கார்த்திக் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 4 ஆண்டுகளுக்கு பிறகு, தன் மனைவியின் சொந்த தங்கையான ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

Actor gautham karthik swimming pool instagram post

வளர்ந்து வரும் நடிகர்: நடிகர் கௌதம் கார்த்திக்கும் தனது தந்தையைப் போல சினிமாவில் ஆர்வம் இருந்ததால் நடிகர் ஆனார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பின் என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கௌதம் கார்த்திக் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தாலும், அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

நீச்சல் குளத்தில் போஸ்: தற்போது கௌதம் கார்த்திக், கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 'தக் லைஃப்'படத்தில் கமிட்டாகி உள்ளார். மேலும், கிரிமினல் என்ற படத்திலும் கமிட்டாகி உள்ளார். இவர் தற்போது, வித்தியாசமான முறையில் நீச்சல் குளத்தில், கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்: நடிகர் கௌதம் கார்த்திக், அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தேவராட்டம் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2022ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X