GV Prakash: ரெபெல் பட ரிலீஸ் தேதி.. குடியரசு தின வாழ்த்துக்களுடன் அறிவித்த ஜிவி பிரகாஷ்!
சென்னை: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டிவரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கும் படங்களில் ரெபெல் படமும் ஒன்று. அறிமுக இயக்குர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் மமிதா பைஜு, வெங்கடேஷ், ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் டீசர் வெளியானது. நடிகர் சூர்யா இந்த டீசரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். கடந்த1980களின் காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் நிக்கேஷ் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். மேலும் தமிழ் மக்களுக்கான முக்கியமான படமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காதல், நகைச்சுவை மற்றும் அரசியல் கலந்த படமாக ரெபெல் உருவாகியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

நடிகர் ஜிவி பிரகாஷ்: நடிகர் ஜிவி பிரகாஷ், நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வருகிறார். இவருக்கு மட்டும் எங்கிருந்துதான் நேரம் கிடைக்கிறதோ என்று தோன்றும்படியாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என சுழன்று சுழன்று பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் ஏறக்குறைய 10 படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் வரிசையில் அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். காதல், காமெடி மற்றும் அரசியல் கலந்து இந்தப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் நிக்கேஷ் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
சூர்யா வெளியிட்ட டீசர்: மாணவர்களின் பிரச்சினைகளை பேசும் படமாக அமைந்துள்ள இந்தப் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து கடந்த ஆண்டு இறுதியில் டீசர் வெளியானது. நடிகர் சூர்யா படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப்படத்தை தயாரித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷுக்கு மமிதா பைஜூ ஜோடியாக நடித்துள்ளார். மேலும் வெங்கடேஷ், ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். 80களின் காலகட்டத்தை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.
உண்மை சம்பவங்கள்: உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ள நிலையில், படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்றும் நிக்கேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை நிரூபிக்கும்வகையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் 22ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இன்றைய தினம் குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கல்லூரி மாணவராக ஜிவி பிரகாஷ்: படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் மமிதா இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். மூணாறு, கோவை போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை குடியரசு தினத்தையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் ரிலீசாக இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், இசை வெளியீடு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











