ஆக்சன் ஹீரோவாக மாறும் ஹரிஷ் கல்யாண்..வைரலாகிறது முரட்டு எக்சசைஸ் பிக்ஸ்!

சென்னை : தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதிக ரசிகர் கூட்டத்தையும் பெண் ரசிகைகளையும் கொண்டுள்ளவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நிலையில் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

இந்நிலையில் இப்பொழுது தெலுங்கு ரீமேக் திரைப்படம் ஒன்றில் பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து நடித்துவரும் ஹரிஷ் கல்யாண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த கையோடு தனது முரட்டு கால்களை கட்டிக்கொண்டு கம்பீரமாக நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரைப்படங்களில்

தெலுங்கு திரைப்படங்களில்

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த போதும் சரியாக கவனிக்கப்படவில்லை. இதற்கிடையில் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

திருப்புமுனையை ஏற்படுத்தியது

திருப்புமுனையை ஏற்படுத்தியது

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பெரும் ரசிகர் கூட்டத்தையும் பெற்றுத்தந்தது

தமிழ் ரீமேக்கில்

தமிழ் ரீமேக்கில்

குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேப் போக தொடர்ந்து காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், இப்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பெல்லி சூப்புழு என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துவருகிறார்.

ப்ரியா பவனி சங்கர்

ப்ரியா பவனி சங்கர்

அந்தத் திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. "ஓ மணப்பெண்ணே" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக முதல் முறையாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

ஜிம்மில் வொர்க்கவுட்

ஜிம்மில் வொர்க்கவுட்

பொதுவாக ஹீரோக்கள் முதலில் காதல் படங்களில் நடித்து பிரபலமான பின் ஆக்சன் ஹீரோவாக மாறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நிலையில் அதே பாணியை இப்பொழுது ஹரிஷ் கல்யாணனும் பின்பற்றுகிறார் என தெரிகிறது. அதற்காக லாக்டவுனில் ஜிம்மில் வொர்க்கவுட் செய்து நிற்கின்ற புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

Recommended Video

நந்தா படத்துல நான் மட்டும் தான் திட்டு வாங்கல |ACTOR VINOD KISHAN CHAT | FILMIBEAT TAMIL
வாவ் ஹரிஷ்

வாவ் ஹரிஷ்

அதைத்தொடர்ந்து இப்பொழுது கால் வொர்க்கவுட் முடித்த கையோடு தனது கட்டுமஸ்தான கால்களை காட்டியவாறு ஹரீஷ் கல்யாண் வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு பெண் ரசிகைகள் பலரும் "வாவ் ஹரிஷ்" என வாய் பிளந்து ஆச்சர்யத்துடன் பார்த்து வரும் நிலையில் ஹரிஷ் கல்யாண் ஒருவேளை ஹாண்ட்சம் ஹீரோவிலிருந்து ஆக்சன் ஹீரோவாக மாறி இருக்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X