For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடின உழைப்புக்கான வெகுமதி... விஜய்க்கு ஹரிஷ் கல்யாண் பாராட்டு!

    |

    சென்னை : நடிகர் விஜய் தன்னுடைய 29 ஆண்டுகால சினிமாவை நிறைவு செய்துள்ளார்.

    இதையொட்டி அவருக்கு சக நடிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என விஜய்க்கு நடிகர் ஹரீஷ் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்தேன்... ரகசியங்களை பகிர்ந்த பிரபல நடிகை! சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்தேன்... ரகசியங்களை பகிர்ந்த பிரபல நடிகை!

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய் தன்னுடைய 29 ஆண்டுகால சினிமா கேரியரை பூர்த்தி செய்துள்ளார். நாளைய தீர்ப்பு படம் மூலமாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் தொடர்ந்து நிற்க கூட நேரமின்றி சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தன்னுடைய தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அவர் நடித்துள்ளார்.

    ஏராளமான ரசிகர்கள்

    ஏராளமான ரசிகர்கள்

    அவர் ஹீரோவாக நடித்த போது பல எதிர்மறை விமர்சனங்களை பெற்றார். ஆனால் தன்னுடைய சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி காட்டியுள்ளார். ஆரம்பத்தில் கல்லூரி மாணவன் என பல கேரக்டர்களை ஏற்று நடித்தார். தொடர்ந்து பூவே உனக்காக உள்ளிட்ட படங்கள் மூலம் தன்னை சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார்.

    ஏறுமுகத்தில் விஜய்

    ஏறுமுகத்தில் விஜய்

    ரசிகர்கள் அவரை தன்னுடைய சிறப்பான ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு எல்லாம் விஜய்க்கு ஏறுமுகமாகவே அமைந்தது. தொடர்ந்து ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்ற மாதிரி படங்களில் நடித்து வருகிறார் விஜய். சில படங்கள் சொதப்பினாலும் விஜயின் அனைத்து படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    29 ஆண்டு சினிமா பயணம்

    29 ஆண்டு சினிமா பயணம்

    இந்நிலையில் தன்னுடைய 29 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார் விஜய். இதையொட்டி அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார் விஜய். தொடர்ந்து 29 ஆண்டுகள் என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது. இந்நிலையில் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ஹரிஷ் கல்யாண் பாராட்டு

    ஹரிஷ் கல்யாண் பாராட்டு

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயின் பழைய மற்றும் புதிய கெட்டப்பை புகைப்படமாக பதிவிட்டு கடின உழைப்புக்கான வெகுமதி என்று குறிப்பிட்டுள்ளார். இத்தனை வருடங்களாக மக்களின் ஆதரவு என்றும் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் இந்த பயணம் மற்ற நடிகர்கள் உற்சாகமாக நடைபோட அடித்தளம் என்றும் கூறியுள்ளார்.

    சிறப்பான இளம் ஹீரோ

    சிறப்பான இளம் ஹீரோ

    நடிகர் ஹரிஷ் கல்யாண் சிறப்பான இளம் ஹீரோவாக நடை போட்டு வருகிறார். இளம் ரசிகைகளின் விருப்பத்திற்குரியவராகவும் அவர் இருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ஓ மணப் பெண்ணே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் அவர் விஜய்யின் வெற்றிப் பயணத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Harish kalyan hails thalapathi Vijay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X