எனக்கு அந்த நடிகையை பிடிக்கும்.. அவரு மேலதான் க்ரஷ்.. ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூட்விடும் இளம் நடிகர்!

சென்னை: பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீதுதான் க்ரஷ் என தெரிவித்துள்ளார்.

Recommended Video

Pennalla pennalla oodha poo | Amit mesmerizing vocal | Quarantine

பியார் பிரேமா காதால், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டது. இருப்பினும் படம் கொரோனா அசசுறுத்தல் முடிந்த பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நேற்று முன்தினம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

ராஷ்மிகா தான் பிடிக்கும்

அப்போது ரசிகர் ஒருவர் எந்த நடிகையின் மீது உங்களுக்கு பெரும் க்ரஷ் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஹரிஷ் கல்யாண், சட்டென ராஷ்மிகா மந்தனாவின் பெயரை குறிப்பிட்டார். ராஷ்மிகாவின் பெயரை #RashmikaMandanna என ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

பெல்லி சூப்புலு

பெல்லி சூப்புலு

ஹரீஷ் கல்யாண் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் கசட தபற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் ரீமேக்கான இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரியா பவாணி ஷங்கர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சுல்தான் படத்தில்

சுல்தான் படத்தில்

ஹரிஷ் கல்யாண் க்ரஷ் கொண்டுள்ள ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர். மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய இவர், கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். . தமிழில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X