தமிழ் புத்தாண்டில் தனது மகளுக்கு பெயர் வைத்த ஹரிஷ் கல்யாண்.. என்ன பெயர் தெரியுமா?

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா தம்பதியருக்கு கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று பெண் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். இந்த நல்ல செய்தியை ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் கடந்த 2010ம் ஆண்டு சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பின் பொறியாளர், வில் அம்பு போன்ற படங்களில் நடித்து தமிழ் மக்களின் யார் என்று தனது அடையாளத்தை பதித்தார். அதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1ல் போட்டியாளராக கலந்து சிறப்பாக விளையாடினார்.
பிக் பாஸில் இருந்து வெளியே வந்த இவர், ரைசாவுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் இளசுகளை கவரும் படமான இருந்ததால், வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த 'லப்பர் பந்து' திரைப்படம் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. அதே போல. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான டீசல் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Harish Kalyan daughter
Photo Credit:

மகளுக்கு பெயர்: அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் 2022 ஆம் ஆண்டு நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா தம்பதிகளுக்கு கடந்த மாதம் மார்ச் 2ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை ஹரீஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, மகாலட்சுமி பிறந்துள்ளார். என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர் என பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து, தமிழ் புத்தாண்டான இன்று தனது மகளுக்கு பெயர் சூட்டுவிழாவை நடத்தி மகளுக்கு பெயர் வைத்துள்ளார். மகளை கையில் வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு மகளின் பெயரை அறிவித்துள்ளார். மகளுக்கு கிரியா என பெயர்வைத்துள்ளார். தமிழ் புத்தாண்டு நாளில் மகளுக்கு பெயர்சூட்டி இருக்கிறார். பலம் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X