Don't Miss!
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Lifestyle
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை நைட் டைம்-ல போடுங்க...
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
லவ்ல கலக்கியாச்சு... அடுத்தது என்ன ஆக்ஷன் அவதாரம்தான்... சிலம்பத்தில் கலக்கும் ஹரீஷ் கல்யாண்!
சென்னை : சிறப்பான பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் ஹரீஷ் கல்யாண்.
சமீபத்தில் வெளியான இவரது ஓ மணப்பெண்ணே படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில் தனது அடுத்தடுத்த படங்களுக்காக தயாராகி வருகிறார் ஹரீஷ்.
நொய்டா
சர்வதேச
திரைப்பட
விழா...3
விருதுகளை
தட்டிச்
சென்ற
ஜெய்பீம்

நடிகர் ஹரீஷ் கல்யாண்
நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக் பாஸ் மூலம் சிறப்பான அறிமுகத்தை கோலிவுட்டில் பெற்றார். தொடர்ந்து பியார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக கைகொடுத்த நிலையில், தற்போது கோலிவுட்டின் காதல் ஹீரோவாக ரசிகைகளின் கனவுகளுக்கு உத்தரவாதம் கொடுத்து வருகிறார்.

ஓ மணப்பெண்ணே படம்
சமீபத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ஓ மணப்பெண்ணே படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. தெலுங்கில் பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்காக ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாகி ஒரிஜினல் படத்தையே விமர்சனத்தில் ஓரம்கட்டியது.

நூறு கோடி வானவில் படம்
இந்நிலையில் தன்னுடைய இயல்பான நடிப்பால் இளம் ரசிகைகளை கவர்ந்து வரும் ஹரீஷ் கல்யாண் தற்போது இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சித்தி இத்னானி ஹரீஷிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிறப்பான மோஷன் போஸ்டர்
சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படத்திற்கு சித்து குமார் இசையமைத்து வருகிறார். இதனிடையே ஜிவி பிரகாஷின் அடங்காதே படத்தை இயக்கிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் புதிய படத்திலும் ஹரீஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயல்பான நடிப்பு
தன்னுடைய படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் ஹரீஷ் தொடர்ந்து காதல் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வித்தியாசமான வகைகளில் காதல் கதைகளை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருவது இவரது சக்சசிற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆக்ஷன் அவதாரம்
இந்நிலையில் இவர் தனது படங்களில் ஆக்ஷன் அவதாரத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி இவர் சிலம்பம் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
Recommended Video

சிலம்பப் பயிற்சி
இவர் எந்தப் படத்தில் சிலம்பம் செய்வதாக வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் அந்த வீடியோவில் பதியப்படவில்லை. ஆயினும் அவரது அடுத்த படத்தில் அவரை ஆக்ஷன் அவதாரத்தில் பார்க்கலாம் என்பது இந்த சிலம்பப்பயிற்சி செய்யும் வீடியோ மூலம் தெரிகிறது.