மியூசிக்கில் கலக்கும் ஹரிஷ் கல்யாண்... எவ்ளோ திறமை இருக்கு இவருக்குள்ள!

சென்னை : நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இளம் நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் மல்டி ஸ்டார் கூட்டணியில் உருவான கசடதபற படத்திற்கு பிறகு இப்பொழுது அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஓ மணப்பெண்ணே என்ற திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்துள்ளார்.

அடுத்ததாக சசி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது மிகப் பிரமாதமாக மியூசிக் வாசிக்கும் வீடியோவை வெளியிட்டு பாராட்டுகளை பெற்று வருகிறார்.

பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகர்களை கொண்டுள்ள இளம் நடிகராக உள்ள ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதைத் தொடர்ந்து தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,தனுசு ராசி நேயர்களே என இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது.

ஓ மணப்பெண்ணே

ஓ மணப்பெண்ணே

தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து இளம் ரசிகைகளின் மனதை கொள்ளையடித்து வரும் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது நடிகை பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து ஓ மணப்பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு தமிழில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.

நீண்ட முடியுடன்

நீண்ட முடியுடன்

அடுத்ததாக பூ, ரோஜா கூட்டம்,555, பிச்சைக்காரன், உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நீண்ட முடியுடன் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புக்காக அடிக்கடி மும்பை சென்று வந்த புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகின.

இசையமைத்து அசத்திய வீடியோ

இசையமைத்து அசத்திய வீடியோ

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக மட்டும் இல்லாமல் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் ஒரே ஒரு பாடலை விஜய் சேதுபதியுடன் இணைந்து பாடியிருப்பார். இந்த நிலையில் தனக்கு பிரமாதமாக மியூசிக்கும் வரும் என நிரூபித்து காட்டியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதை மயக்கும் அட்டகாசமான மெலோடி இசையமைத்து அசத்திய அந்த வீடியோவை இப்பொழுது பகிர்ந்துள்ளதை அடுத்து அனைவரும் ஹரிஷ் கல்யாணுக்குள் இப்படி ஒரு இசைத் திறமையா என வியந்து பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X