எண்ணித் துணிக படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் நடிகர் ஜெய்!
சென்னை: நடிகர் ஜெய் இப்பொழுது எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித் துணிக என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கேப் மாரி படத்திற்கு பிறகு நடிகை அதுல்யா ஜெய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ஜெய் முடித்து விட்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தலைமுறையினரை கவரும்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக உள்ள நடிகர் ஜெய் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரி, எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியானது. முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்போதுள்ள இளம் தலைமுறையினரை கவரும் வகையில் வெளியான இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

ஜெய்யின் 27வது திரைப்படத்தை
இந்த நிலையில் ஜெய்யின் 27வது திரைப்படத்தை இயக்குனர் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கி வருகிறார்.
அதிரடி ஆக்ஷன் கதைகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு எண்ணித் துணிக என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேப்மாரி படத்திற்கு பிறகு ஜெய்க்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி இதில் நடித்துள்ளார்.

ஜெய்க்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி
தமிழ் சினிமாவில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நடிகை அதுல்யா ரவி முதல்முறையாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் கலகலப்பான கலாட்டா கல்யாணம் திரைப்படமாக உருவாகி உள்ளது. இதில் நடிகர் பாக்யராஜ் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.இந்த படமும் அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.

எண்ணித்துணிக
தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த ஜெய் இப்பொழுது ஆக்ஷன் ஹீரோவாக மாறி உள்ளதை அடுத்து ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள எண்ணித்துணிக திரைப்படம் இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

டப்பிங் பணிகள் மொத்தமும் முடிந்து
தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சுரேஷ் சுப்ரமணியம் நடித்துள்ளார். மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். சமீபத்தில் எண்ணித் துணிக டப்பிங் பணிகளை தொடங்கிய ஜெய் தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் பணிகள் மொத்தமும் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











