நடிகராக இருந்துகிட்டு இப்படி தப்பு பண்ணலாமா?: ஜெய்யை சுற்றி வளைத்து திட்டிய மக்கள்
Recommended Video

புதுச்சேரி: நடிகர் ஜெய்யை மக்கள் சுற்றி வளைத்து திட்டிய சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஜருகண்டி படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்து வருகிறார். பிச்சுமணி இயக்கி வரும் இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரெபா ஜான் நடிக்கிறார். ரோபோ ஷங்கர், டேனி, அமித், இளவரசு, மைம் கோபி உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது.

காட்சி
சாலையின் ஒரு பக்கத்தில் ஜெய் நிற்க மறுபக்கத்தில் இருந்து வில்லன் அவரை பார்க்கும் காட்சியை படமாக்கினார்கள். ஜெய் வில்லனை பார்த்து சத்தமாக பேசி சில சைகைகளை செய்ய வேண்டும். அந்த சாலையில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் கேமராவை மறைவாக வைத்து காட்சியை படமாக்கினார்கள்.

ஜெய்
காட்சி படமாக்கப்படும் வரை மக்கள் யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் காட்சியை முடித்த பிறகு சிலர் ஜெய்யை நோக்கி விரைந்து வந்து அவரை திட்டத் துவங்கிவிட்டனர். தப்பு பண்ணிவிட்டீர்கள் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரியாமல் நின்றேன் என்றார் ஜெய்.

திருட்டு டிவிடி
திடீர் என்று மக்கள் ஏன் தன்னை திட்டுகிறார்கள் என்று புரியாமல் விழித்த ஜெய் திரும்பிப் பார்த்தபோது திருட்டு டிவிடிகள் விற்கும் கடைக்கு முன்பு தான் நிற்பது புரிந்தது. தான் திருட்டு டிவிடிகள் வாங்க வந்ததாக தவறாக நினைத்து மக்கள் திட்டுவதை புரிந்து கொண்டார் ஜெய். ஆனால் அவர் விளக்கம் அளிக்கும் முன்பு நிலைமை கையை மீறி சென்றுவிட்டது.

விளக்கம்
மக்கள் என்னை சுற்றி வளைத்து கத்திக் கொண்டிருந்ததால் என்னால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. நல்லவேளையாக கேமரா குழு அங்கு வந்து இது வெறும் படப்பிடிப்பு என்று விளக்கியது. அதன் பிறகே உண்மை தெரிந்து மக்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கு முன்பும் நான் மக்கள் கூட்டத்தில் சிக்கியுள்ளேன். ஆனால் இப்படி ஒரு மோசமான நிலையில் சிக்கியது இதுவே முதல் முறை என்கிறார் ஜெய்.


Click it and Unblock the Notifications











