Actor Jai: இஸ்லாமியரானது ஏன்? நடிகர் ஜெய் விளக்கம்!

சென்னை: நடிகர் ஜெய் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பிரச்சாரம் செய்ய தயங்கிய போது விஜய் மீது உள்ள அன்பால் தவெக வேட்பாளரை ஆதரித்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். தற்போது ஜெய் அளித்து இருக்கும் பேட்டியில் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் ஜெய்: அதில், முன்பு நான் கோவில், சர்ச் என எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஆனால். சில கோவில்களில் அவமானங்களையும், மனஅதிருப்தியையும் சந்தித்திருக்கிறேன். அதே நேரத்தில், மசூதிக்கு சென்றபோது முற்றிலும் வேறுபட்ட அனுபவம் கிடைத்தது. அங்கு அனைவரும் ஒரே வரிசையில் நின்று தொழுகை செய்தனர். என்னை யாரும் நடிகன் என்று தனியாக பிரித்துப்பார்க்கவில்லை. அனைவரும் கடவுளின் முன் சமம் என்ற உணர்வை அங்கே தெளிவாக உணர முடிந்தது. அந்த சமத்துவமும், கடவுளை மட்டுமே உயர்வாக கருதும் அந்த எண்ணமும் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Jai interview
Photo Credit:

விஜய் மீது அதீத அன்பு: நடிகர் ஜெய் பகவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் விஜய்க்கு தம்பியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு, சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெய், சட்டென்று மாறுது வானிலை படம் நடித்துள்ளார். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. பாபு விஜய் இயக்கி இந்த படத்தில், மீனாட்சி கோவிந்த், யோகி பாபு, மற்றும் கருட ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போது தான் இஸ்லாமியராக மாறியது குறித்து விளக்கம் அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் விஜய் மீது அதீத அன்பு கொண்ட ஜெய், தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விஜய்க்கு ஆதரவாக பல இடங்களில் பிரச்சாரம் செய்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X