முதல் முறையாக வில்லனாக மிரட்டப்போகும் பிரபல நடிகர்... சைக்கோ கில்லர் ரோலாம்!
சென்னை: சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெய். 2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு கேப்மாரி திரைப்படம் வெளியானது.

ஜெய் கைவசம் படங்கள்
அதன்பிறகு அவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இருப்பினும் பிரேக்கிங் நியூஸ், எண்ணி துணிக, பார்ட்டி, ஷிவ ஷிவா உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர்கள் கோபி நயினார், பத்ரி மற்றும் அட்லி ஆகியோரின் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் ஜெய்.

முதல் முறையாக வில்லன்
இந்நிலையில் நடிகர் ஜெய் இயக்குநர் பத்ரி இயக்கத்தில் நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பட்டாம்பூச்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் ஜெய் முதல் முறையாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

80களில் நடக்கும் கதை
இந்நிலையில் இயக்குநர் பத்ரி இப்படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்தப் படம் 80களில் நடக்கும் ஒரு கதையாகவும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் சைக்கோ கில்லருக்கும் இடையிலான மூளை மற்றும் துணிச்சலான விளையாட்டு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதில் போலீஸ் அதிகாரியாக சுந்தர் சியும், சைக்கோ கில்லராக ஜெய்யும் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார் இயக்குநர் பத்ரி.

போலீஸ்காரர் கெட்டப்பில்
சுந்தர் சியை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்ததற்கு 80களின் கதை என்பது ஒரு காரணம் என்றும் பத்ரி தெரிவித்துள்ளார். அவர் ஆறடிக்கு மேல் உயரம் கொண்டவர் மற்றும் அவரது நன்கு கட்டமைக்கப்பட்ட உடலமைப்பு அவரை உடனடியாக ஒரு போலீஸ்காரர் என நம்ப வைக்கும் என்பதால் அவரை இந்த படத்தில் கமிட் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
Recommended Video

புத்திசாலிதனத்தை பயன்படுத்தி
அதே சமயம், 80களில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் தொழில் நுட்பம் இல்லாமல் போலீஸ் கேரக்டர், வழக்கை முறியடிக்க தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் படம் உருவாக்கப்படுகிறது என்றும் இதனை சுந்தர் சி நன்கு புரிந்துகொண்டார் என்றும் இயக்குநர் பத்ரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











