அடுத்த வருஷம் சிம்புவுக்கு டும் டும் டும்... உண்மையை போட்டுடைத்த ஜெய் !

சென்னை : தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விழாவில் பேசிய நடிகர் ஜெய், சிம்பு திருமணத்திற்கு பிறகு தான், தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

சிம்புவுக்கு எப்போதான் கல்யாணம் நடக்குமோ... அவரை எப்போ தான் மாப்பிள்ளை கோலத்தில் பார்ப்போமோ என்று ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு இந்த பதில் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

இருப்பினும் ஜெய் இப்படி சொல்லிட்டாரு, ஆனால் சிம்பு என்ன முடிவுல இருக்கோரோ என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், திருமணம் எப்போது என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜெய், சிம்பு திருமணத்திற்கு பிறகு தான், நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என்று கூலாக பதிலளித்தார் ஜெய்.

ஆசையா இருக்கு

ஆசையா இருக்கு

விஜய் பற்றி பேசிய ஜெய், பகவதி படத்தில் விஜய் சாருக்கு தம்பியாக இணைந்து நடித்திருந்தேன். அதன் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. இந்த ஆசையை அவரிடம் 150 முறையாவது கேட்டு இருப்பேன் என்றார். ஆனால், அவரோ, நீ தான் ஹீரோ ஆகிட்டீல.. அப்புறம் ஏன்.? என்று சொல்லி விட்டார் என தெரிவித்தார்.

ஜெய் நடிக்கும் படங்கள்

ஜெய் நடிக்கும் படங்கள்

ஜெய் தற்போது, பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு அவர் பெயரிடப்படாத புதிய படத்தில் சுந்தர் சி-க்கு வில்லனாகவும் நடித்து வருகிறார்.

Recommended Video

நடிகர் சிம்புவின் பிரச்சனையை தீர்த்து வைத்த ஐசரி கணேஷ்... இன்றைய டாப் 5 பீட்ஸில்!
இஸ்லாமிய இளைஞராக

இஸ்லாமிய இளைஞராக

வெங்கட்பிரபு இயக்கி இருக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ள படம் மாநாடு. இப்படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அரசியல் கதை களத்தை கொண்ட ஆக்சன் திரைப்படமான மாநாடு திரைப்படத்தில் ஒரு இஸ்லாமிய இளைஞனாக நடித்திருக்கிறார் சிம்பு. அதேபோல கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்திற்காக 100 கிலோவில் இருந்த சிம்பு மிகவும் ஸ்லிம்மாக மாறி மாஸ் காட்டி வருகிறார்.

அடுத்த வருஷம் டும் டும்

அடுத்த வருஷம் டும் டும்

சிம்பு சினிமாவுக்கு வந்த போது நடிப்பு, நடனம்,இயக்கம் ,பின்னணி பாடல், இசை என எப்படி ஒரு ரவுண்டுகட்டி கலக்கி வந்தாரோ அதே பொலிவுடன் தற்போது சூப்பர் எனர்ஜியோடு வலம் வருகிறார். இது எல்லாம் வச்சி பார்க்கும் போது ஒரு வேளை ஜெய் சொன்ன மாதிரி அடுத்த வருஷம் சிம்புவுக்கு டும் டும் தானா என்று கேட்கத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X