Jayam Ravi: என் சைட்ல தப்பில்லை.. இந்த வருஷம் திருப்பி எந்திரிப்பேன்.. ஜெயம் ரவி எமோஷனல்!
சென்னை: நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் சொதப்பலாக அமைந்த நிலையில் வரும் 14ம் தேதி பொங்கலையொட்டி அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பு ராட்சசியாக கவனம் ஈர்த்துவரும் நித்யா மேனன் இணைந்துள்ளார்.
படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதும் பலமாக பார்க்கப்படுகிறது.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய், லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் 14ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் கொண்டாட்டத்திற்கு மற்றொரு காரணமாக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் காணப்படுகிறார். அவரது இசையில் அடுததடுத்த 3 பாடல்களை படக்குழுவினர் லிரிக் வீடியோவாக வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளனர். இதில் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியான இழு இழு இழுக்குதடி பாடல் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
காதலிக்க நேரமில்லை படம்: ரொமாண்டிக் ஜானரில் வித்தியாசமான கதைக்களத்தில் காதலிக்க நேரமில்லை படம் உருவாகியுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெயிலரும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களையும் வெப் தொடரையும் இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காதல், காதல் தோல்வி அனைத்தையும் அவர் சிறப்பாக கையாண்டுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் என்ற மல்ட்டி ஹீரோ சப்ஜெக்டை தவிர்த்து அடுத்தடுத்து ஜெயம்ரவியன் இறைவன், சைரன், பிரதர் படங்கள் சொதப்பலாகவே அமைந்தன.
தோல்விப் படங்கள்: இந்நிலையில படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம்ரவி, தான் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையில்தான் இருப்பேன் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். வெற்றியில்லாமல் தோல்வியிலலை அதேபோல தோல்வியில்லாமல் வெற்றியில்லை என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் இதே போன்றதொரு சூழ்நிலையில் தான் இருந்ததாகவும் 3 வருடங்கள் ஒரே படத்தில் கவனம் செலுத்தியதாகவும் தன்னால் ஒரு இன்டர்வியூ கூட கொடுக்க முடியாத சூழல் இருந்ததாகவும் கூறியுள்ள ஜெயம்ரவி, படங்கள் தோல்வியடைந்ததால் தான் உடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டு வந்த ஜெயம்ரவி: ஆனால் அந்த சூழலில் தான் எந்த தவறையும் செய்யவில்லை என்பது குறித்து தான் யோசித்ததாகவும் தான் தவறாக நடிக்கவில்லை, தவறான கதையை தேர்வு செய்யவில்லை இதுகுறித்தெல்லா யோசித்தபோது தன் பக்கத்தில் எந்த தவறும் தனக்கு தோன்றவில்லை என்று தெரிவித்துள்ள ஜெயம்ரவி, பிறகு தான் ஏன் துவண்டு போக வேண்டும் என்று யோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைதொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம் என அடுத்தடுத்த 3 ஹிட்களை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மீண்டும் எந்திரிப்பேன்: வெற்றிக்கும் தோல்விக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை தான் உணர்ந்ததாலேயே இந்த மாற்றம் சாத்தியமானதாகவும் ஜெயம் ரவி கூறியுள்ளார். தோற்பது தோல்வியடைந்ததாக அர்த்தத்தை கொடுக்காது மாறாக அவர் மறுபடியும் எழாமல் இருப்பதுதான் தோல்வியடைந்ததாக கருதப்படும் என்றும் ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். திருப்பி எந்திரித்துக் கொண்டால் தோல்வி என்பது கிடையாது என்று கூறிய ஜெயம்ரவி, இந்த வருஷம் தான் திரும்பவும் எந்தரிப்பேன் என்றும் உற்சாகமாக தெரிவித்துள்ளார். அதற்கான நல்ல லைன் அப்ஸ் தன்னிடம் இருப்பதாகவும் ஜெயம்ரவி சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications