Jayam Ravi: சைரன் படத்தின் FDFS.. ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடிய ஜெயம் ரவி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் சைரன் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் சாம் சிஎஸ் இசையில் பின்னணிசையும் அமைந்துள்ளன. ஆனாலும் படத்தின் இசை ரசிகர்களை அந்த அளவில் கவரவில்லை என்று கூற வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் கைதியாகவும் இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி சைரன் படத்தில் நடித்துள்ளார்.

பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே அவர் இளமையான லுக்கில் காணப்படுகிறார். மற்றபடி நடுத்தர வயது கேரக்டரில் தன்னுடைய மகளின் அன்பிற்காக ஏங்கும் கைதியாகவே அவர் படத்தில் அதிக காட்சிகளில் நடித்துள்ளார். படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது. பேமிலி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஸ்கோர் செய்கிறார். படத்தின் இயக்குநரும் அறிமுக இயக்குநராக இருந்தபோதிலும் படத்தின் இயக்குநராக சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Actor Jayam Ravi celebrates Siren movie FDFS with fans in Madurai

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார் முன்னணி இயக்குனர்களாக இருந்தாலும் அறிமுக இயக்குனர்களாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பின் மூலம் அவரது கேரக்டர்களை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து இன்றைய தினம் வெளியாகி உள்ளது சைரன் படம். கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தன்னுடைய சக்சஸ் பயணத்தை துவங்கியுள்ளார் ஜெயம் ரவி.

சைரன் படம்: சைரன் படம் ரசிகர்களை சிறப்பாகவே கவர்ந்துள்ளது. படத்தில் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் கைதியாகவும் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக அவருக்கு டப் கொடுத்துள்ளார். சில நிமிடங்களே படத்தின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். மாற்றுத்திறனாளியாக நடித்து இவர் ஸ்கோர் செய்துள்ளார். இதேபோல சமுத்திரக்கனி மற்றும் அழகம் பெருமாளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வில்லன் கேரக்டர்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். இன்றைய தினம் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் முன்னதாக படத்திற்கு அதிகப்படியான ப்ரமோஷன் கொடுக்கப்பட்டிருந்தன.

சைரன் படத்தின் FDFS: படத்தின் இசை வெளியீடு உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. படம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகளை ஜெயம் ரவி கொடுத்து வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ரிலீசையொட்டி அவர் மதுரையில் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடினார். இதையொட்டி காரில் என்ட்ரி கொடுத்த அவருக்கு ரசிகர்கள் மலர் தூவி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மேளதாளங்களுடன் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் ஜெயம்ரவிக்கு ஆங்காங்கே பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்து ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை மற்றும் ஜெனி என படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படங்களும் சிறப்பான வகையில் தயாராகி வரும் நிலையில் இந்த ஆண்டிலேயே இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்காள் எதிர்பார்க்கலாம். இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X