Jayam Ravi: எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு.. ஓப்பனாக பேசிய ஜெயம் ரவி!
சென்னை: கோலிவுட்டில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி. திரைப்பட தொகுப்பாளர் 'எடிட்டர்’ மோகனின் இரண்டாவது மகனான இவர் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமானார். கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கான இருக்கும் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
ஜெயம் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்னும் அதே குறும்புத்தனமும் இளமையும் மாறாமல் இளம் பெண்களுக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக, இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவதும், ஹீரோக்கள் இயக்குநர்களாக மாறுவதும் வாடிக்கையாகி வருகிறது. கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோரின் லிஸ்டில் இப்போது நடிகர் ஜெயம் ரவியும் இணைய இருக்கிறார்.

அடுத்தடுத்து தோல்வி: நடிகர் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இறைவன், சைரன் என இரு படங்களுமே தோல்வித் திரைப்படமாக இருந்தன. இதையடுத்து, தற்போது ஜெயம் ரவி ராஜேஷ்.எம் இயக்கி இருக்கும் 'பிரதர்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரதர் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், யூடியூப் சேனலில் படம் குறித்து பேசி வருகிறார்.
கெட்டப்பழக்கம்: அதில், எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு நல்ல இயக்குநர்களுக்கு போன் பண்ணி சார் நம்ம படம் பண்ண வேண்டும் என்று கேட்க மாட்டேன். அது தவறு என்று இப்போ தான் புரியுது. எனக்கு வெற்றிமாறன் சார் கூட படம் பண்ண வேண்டும் என்று ஆசை. சமீபத்தில் தைரியத்தை வரவெச்சிட்டு வெற்றிமாறன் சாரைப் பார்த்து, நாம படம் பண்ணலாம் சார் என்று கேட்டேன். அவர் கையில் இருக்கும் படத்தை முடிச்சிவிட்டு கண்டிப்பா வரேன் என்று சொன்னார். அவருடைய கதையை கூடிய விரைவில் நான் கேட்பேன் என்றார். ஜெயம் ரவி வெற்றி மாறன் காம்பினேஷனும் நல்லாத்தான் என்று, அந்த நாள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
சர்ச்சை: நடிகை ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த, ஆர்த்தி, விவாகரத்து முடிவை தன்னை கேட்காமல் ஜெயம் ரவி வெளியிட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு கெனிஷா என்ற பெங்களூரு பாடகியுடன் தொடர்பு இருப்பதாகவும் இவருக்காகத்தான் தனது மனைவியை அவர் பிரிந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இருவருமே அதை மறுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











