Actor Jayam Ravi: தடைகளை உடைத்து வெளியான ஜீனி.. வெளியானது ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இருந்தபோதிலும் அவரது இறைவன் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. கடந்த ஆண்டில் மல்டி ஸ்டார் படமாக இயக்குனர் மணிரத்னம் டைரக்ஷனில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கை கொடுத்தது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. அதில் ஜீனி படமும் ஒன்று. இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பேன்டசி திரில்லராக ஜீனி படம் உருவாகியுள்ளது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, கிருத்தி ஷெட்டி, தேவயாணி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர், அடுத்தடுத்து காதலிக்க நேரமில்லை, பிரதர் உள்ளிட்ட ஜெயம் ரவியின் படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன, இந்த ஆண்டிலேயே அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ஜீனி படமும் ஒன்று, இந்த படத்தை அதிகமாக எதிர்பார்த்து ஜெயம் ரவி காத்திருக்கிறார், இந்த படம் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் தன்னை இணைத்து வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின, இதில் மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் ஓரளவுக்கு கை கொடுத்தது. இதனிடையே அடுத்ததாக சில மாத இடைவெளியில் வெளியான இறைவன் படம் சொதப்பியது. சைக்கோ திரில்லராக உருவாகியிருந்த இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களது காம்பினேஷனில் முன்னதாக வெளியான தனி ஒருவன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

மூன்று நாயகிகள்: ஜெயம் ரவி -நயன்தாரா காம்பினேஷனில் இறைவன் படமும் சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டில் காதலிக்க நேரமில்லை, ஜீனி, பிரதர் என ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர், ஜீனி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது,
ஜீனி படத்தின் பர்ஸ்ட் லுக்: இந்த படம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது, இதில் வித்தியாசமான கெட்டப்பில் அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக ஜெயம் ரவி தடைகளை தகர்த்து வெளியேறுவதாக காணப்படுகிறது, அவரை சுற்றிலும் பணம், பொற்காசுகளுடன் ஐஸ்கிரீம் உள்ளிட்டவை காணப்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் 25வது படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ள சூழலில் அடுத்தடுத்து படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
பிரம்மாண்ட உருவாக்கம்: ஜெயம் ரவி நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜீனி படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த படம் பூஜையுடன் துவங்கப்பட்டது. முன்னதாக வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கோமாளி, போகன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெயம் ரவி மூன்றாவது முறையாக அந்நிறுவனத் தயாரிப்பில் ஜீனி மூலம் இணைந்துள்ளார். போகன், கோமாளி படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது அதேபோல ஜீனி படமும் சிறப்பாக அமையும் என்று ஜெயம் ரவி முன்னதாக படபூஜையின் போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











