3 ஸ்கிரிப்ட் ரெடி.. முதல் படத்துல யோகிபாபுதான் ஹீரோ.. இயக்குநராகும் ஜெயம்ரவி குதூகலம்!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி காதல் ஹீரோவாக, காமெடி களங்களில் தன்னுடைய கேரியரை துவங்கிய நிலையில் அடுத்தடுத்து ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை சிறப்பாக மாற்றிக் கொண்டார். அவரது இந்த மாற்றம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் தீபாவளியை ஒட்டி ஜெயம் ரவியின் பிரதர் படம் ரிலீசாகியுள்ளது.
அக்கா மற்றும் தம்பி சென்டிமென்ட்டை மையமாக வைத்து பிரதர் படத்தை பிரபல காமெடிபட இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நீண்ட காலங்களுக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அமைத்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களை படத்தின் காமெடி களம் கவர்ந்துள்ளன.

பிரதர் படம்: நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது, பிரியங்கா மோகன், விடிவி கணேஷ், நட்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் லீட் கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். அக்கா மற்றும் தம்பி செண்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த எமோஷனலான கதைக்களத்தில் அவர் புகுந்து விளையாடி இருக்கலாம் என்றும் ஆனால் அவர் அடக்கியே வாசித்திருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து ஜெயம் ரவியின் ஜீனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளன.
நடிகர் ஜெயம்ரவி: இந்த படங்களையடுத்து தான் இயக்குநராக களம் இறங்க உள்ளதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார். தன்னிடம் மூன்று படங்களின் கதைகள் கைவசம் உள்ளதாகவும் முதலில் யோகி பாபுவுடன் இணைந்து முதல் படத்தை இயக்க உள்ளதாகவும் ஜெயம் ரவி தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க யோகி பாபு ஓகே சொல்லிவிட்டதாகவும் விரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் இதையடுத்து மூன்றாவது கதைக்களத்தில் இரண்டு ஹீரோ சப்ஜெக்டை தான் உருவாக்கியுள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
இயக்குநராகும் ஜெயம்ரவி: முதல் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டால் உடனடியாக ஷூட்டிங்கை துவங்கி விடலாம் என்றும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவை எடுத்திருந்தார் ஜெயம்ரவி. தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரியும் முடிவை அவர் தன்னுடைய ரசிகர்களிடம் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் பிரதர் படம் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. நீண்ட காலங்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் பிரதர் படத்தில் இணைந்துள்ளார் ஜெயம் ரவி.
ஜெயம்ரவி -ஹாரிஸ் கூட்டணி: பிரதர் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை படங்கள் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











