Jayam Ravi: 22 வருஷம் கழிச்சிதான் அந்த ஆசை நிறைவேறுச்சு.. உற்சாக கொண்டாட்டத்தில் ஜெயம்ரவி!
சென்னை: நடிகர் ஜெயம்ரவி -நித்யா மேனன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ள கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முன்னதாக அழுத்தமான கதைக்களத்தில் ஜெயம்ரவி அடுத்தடுத்த படங்களை கொடுத்த நிலையில், அவை அவருக்கு கைக்கொடுக்காத நிலை காணப்பட்டது. இந்நிலையில் அவருக்கு எப்போதும் கைக்கொடுக்கும் காதலை மையமாக வைத்து காதலிக்க நேரமில்லை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அடுத்தடுத்து 3 பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

காதலிக்க நேரமில்லை படம்: நடிகர் ஜெயம்ரவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் மிகப்பெரிய கொண்டாட்டம் மற்றும் எதிர்பார்ப்புடன் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் இழு இழு உள்ளிட்ட அடுத்தடுத்த 3 மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம்ரவி: வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து ஜெயம்ரவி அடுத்தடுத்து இறைவன், சைரன், பிரதர் போன்ற படங்களை கொடுத்த நிலையில் அவை அடுத்தடுத்து சொதப்பின. இந்நிலையில் ஜெயம்ரவிக்கு எப்போதுமே கைக்கொடுக்கும் காதலை மையமாக வைத்து காதலிக்க நேரமில்லை படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஜெயம்ரவி, நித்யா மேனன் மற்றும் இயக்குநர் கிருததிகா உள்ளிட்டவர்கள் அடுத்தடுதத பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
ஜெயம்ரவியின் கனவு: அந்த வகையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஜெயம்ரவி, இழு இழு பாடலுக்கு மேடையில் சூப்பரான குத்தாட்டாம் போட்டிருந்தார். இந்த அளவிற்கு அழகையும் எனர்ஜியையும் இவ்வளவு நாட்கள் எங்கே வைத்திருந்தார் என்பதாக இந்தப் பாடலுக்கு அவரது நடனம் குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் தன்னுடைய 22 ஆண்டு கனவு பூர்த்தியாகியுள்ளதாக ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். தான் சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் தான் நடிக்க வேண்டும என்பது தன்னுடைய கனவாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து கனவு நனவான தருணம்: இந்நிலையில் அடுத்தடுத்து 4 படங்களில் தான் ஏஆர் ரஹ்மான் இசையில் நடித்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, ஜெனீ படங்களுடன் தற்போது காதலிக்க நேரமில்லை படத்திலும் ஏஆர் ரஹ்மான் இசையில் தான் நடித்துள்ளது மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல முதல் முறையாக தான் பெண் இயக்குநர் ஒருவருடன் இணைந்தது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எந்த விஷயத்தையும் இயல்பாக செய்ய கிருத்திகா கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











