அரசியல் கதைக்களத்தில் நடிக்கும் ஜெயம்ரவி.. அவருக்கு ரொம்ப ஆசையாம்.. இப்படி சொல்லியிருக்காரே!

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. இன்னும் சில தினங்களில ரசிகர்களை சந்திக்கவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீசையொட்டி ஜெயம்ரவி, நித்யா மேனன் மற்றும் கிருத்திகா ஆகியோர் அடுத்தடுத்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில படங்கள் ஜெயம்ரவிக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில் காதலிக்க நேரமில்லை படம் அவருக்கு எப்போதுமே கைக்கொடுக்கும் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

jayam ravi kadhalikka neramillai movie ganesh k babu

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் கவனம் ஈர்த்தாலும் சரியாக கைக்கொடுக்காத நிலையில அடுத்ததாக அவருக்கு எப்போதும் சிறப்பாக அமையும் காதலும் காதல் நிமித்தமும் கதைக்களத்தில் களமிறங்கியுள்ளார். காதலிக்க நேரமில்லை என்று படத்தில் டைட்டில் அமைந்தாலும் கதைக்களம் என்னவோ காதலை மையமாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்கள், வெப் தொடரை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது காதலிக்க நேரமில்லை படம். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க நேரமில்லை படம்: வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்திற்காக ஜெயம்ரவி, படத்தின் நாயகி நித்யா மேனன், டைரக்டர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து சிறப்பான பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர். தன்னுடைய முந்தைய படங்கள், அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள், ஏஆர் ரஹ்மானுடனான கூட்டணி என பல விஷயங்களை பேசி வருகிறார் ஜெயம்ரவி. மேடை கிடைத்தால் போதும் என்று இறங்கி நடனமாடுகிறார் படத்தின் இழு இழு பாடல் மிகப்பெரிய வைபை ரசிகர்களிடையே ஏற்படுத்திவரும் சூழலில் இந்தப் பாடலுக்கு ஜெயம்ரவி ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது.

jayam ravi kadhalikka neramillai movie ganesh k babu


டாடா இயக்குநருடன் கூட்டணி: இந்நிலையில் அடுத்ததாக தான் டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபுவுடன் இணைந்துள்ளது குறித்து ஜெயம்ரவி உற்சாகம் தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெனி படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், டாடா இயக்குநருடன் இணைந்துள்ள படத்தின் கதைக்களம் அரசியல் ஜானரில் மிகவும் மாஸாக உருவாகி வருவதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். அவருடன் இணைந்து நடிக்க தானும், தன்னை இயக்க அவரும் மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில் இந்தப் படம் உருவாகி வருவதாக ஜெயம்ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுபோன்ற மாஸ் கதைக்களத்தில் நடிக்க தனக்கு இதுவரை ஆர்வம் வந்ததில்லை என்றும் தற்போதுதான் அதுபோன்ற விருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயம்ரவி கூறியுள்ளார்.


சென்சார் ஓவர்: காதலிக்க நேரமில்லை படம் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம்ரவி -நித்யா மேனனுடன் யோகிபாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, ஜான் கொக்கெய்ன், வினோதினி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்திற்கு தற்போது சென்சார் சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 2 மணிநேரம் 22 நிமிடங்கள் என்று படக்குழுவினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X