Actor Jayam Ravi: மணிரத்னம் சாருக்கு நோ சொல்ல முடியாது.. உண்மையை பகிர்ந்த ஜெயம் ரவி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அவருக்கு இந்த ஆண்டை சிறப்பாக துவக்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் பிரதர், ஜெனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதனிடையே கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் ஜெயம் ரவி முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். முன்னதாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களிலும் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இந்தப் படங்களில் டைட்டில் ரோலில் ஜெயம் ரவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னணி நாயகனான ஜெயம் ரவி இதுபோல மல்டி ஸ்டாரர் படங்களிலும் நடித்து வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அடுத்ததாக தக் லைஃப் படத்தின் சூட்டிங்கில் மார்ச் மாதத்தில் ஜெயம் ரவி இணையவுள்ளார். கமல்ஹாசன் -ஜெயம் ரவி காம்பினேஷன் காட்சிகள் சென்னையில் நடக்கவுள்ள இந்த ஷெட்யூலில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டுள்ளது.

Actor Jayam Ravi opens up about the Multi starrer movies with Maniratnam directiion

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் அவருக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுதந்தன. இதில் இறைவன் படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு சிறப்பாகவே துவங்கியுள்ளது. அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சைரன் படம் அவருக்கு சிறப்பான துவக்கத்தை இந்த ஆண்டில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சைரன் படம்: அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சைரன் படத்தில் அப்பா -மகள் உறவை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்திருந்தார் ஆண்டனி பாக்யராஜ். இந்த படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் கைதி என இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி நடித்திருந்தார். ஒரு கேரக்டரில் இளைஞனாகவும் மற்றொன்றில் நடுத்தர வயது நபராகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் பிரதர், ஜெனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி: இதனிடையே தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள தனி ஒருவன் 2 படத்தின் பூஜையும் சென்னையில் போடப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் சில மாதங்கள் கழித்து தான் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கமல்ஹாசனின் தக் லைஃக் படத்தில் முக்கியமான கேரக்டரில் இணைந்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கிய வரும் சூழலில் வரும் மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் ஜெயம் ரவி இணையவுள்ளார். இந்த ஷெட்யூல் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் -ஜெயம் ரவி காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

Actor Jayam Ravi opens up about the Multi starrer movies with Maniratnam directiion

மணிரத்னத்திற்கு நோ சொல்ல முடியாது: முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய மல்டி ஸ்டாரர் படங்களில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இதனிடையே அடுத்ததாக மல்டி ஸ்டாரர் படமான தக் லைஃப் படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்நிலையில் அவர் அடுத்தடுத்து இதே போல மல்டி ஸ்டாரர் படங்களில் இணைவாரா என்று அவரது சமீபத்திய பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க தான் நோ சொல்ல முடியாது என்றும் அதனால்தான் மல்டி ஸ்டார் படமாக இருந்தாலும் இந்தப் படங்களில் நடிக்க கமிட்டானதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X