Actor Jayam Ravi: துல்கரை தொடர்ந்து தக் லைஃப் படத்திலிருந்து விலகும் ஜெயம் ரவி.. என்னடா நடக்குது?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலின் KH234 படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் செர்பியாவில் இந்த படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டது. இதில் கமல்ஹாசன் மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டவர்களின் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அமெரிக்காவில் இந்தியன் 2 வேலைகளில் பிசியாக இருந்த கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்காக சென்னை திரும்பினார்.

இதையடுத்து செர்பியாவில் திட்டமிடப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர். இதையடுத்து இந்த செர்பியா சூட்டிங், எலெக்ஷன் நிறைவடைந்த உடன் மே மாதத்தில் மீண்டும் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் கால்ஷீட் கிடைக்காத நிலையில் இதனால் மற்ற நடிகர்களின் கால்ஷீட்டும் பாதிக்கப்படுவதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த பிரச்சினைகளால்தான் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த துல்கர் சல்மான் படத்திலிருந்து விலகினார்.

Actor Jayam Ravi seems to be out of Thug life movie because of date issues

தக் லைஃப் படம்: நடிகர் கமல்ஹாசன், திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் KH234 படத்தை இயக்கிவருகிறார் மணிரத்னம். தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடந்துவந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங் செர்பியாவில் நடக்க உள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவில் இருந்த கமல்ஹாசன், நேரடியாக இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக செர்பியா செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது.

கேன்சல் ஆன செர்பியா சூட்டிங்: இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த ஷூட்டிங்கில் கமல் பங்கேற்க முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற தேர்தலையொட்டிய பணிகளில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். தொடர்ந்து அந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் 19ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதையடுத்தே கமல்ஹாசன் படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, செர்பியாவில் நடைபெறவிருந்த ஷூட்டிங்கில் கமல்ஹாசனுடன் இணைந்து ஜெயம் ரவியும் நடிக்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

தக் லைஃப் படத்திலிருந்து ஜெயம் ரவி விலகல்: ஆனால் தற்போது அந்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏறக்குறைய இன்னும் ஒரு மாத காலத்திற்கு படக்குழுவினர் அடுத்த கட்ட ஷூட்டிங் குறித்து திட்டமிட முடியாத நிலையில் உள்ளனர். இதுபோன்ற குளறுபடிகளால் படத்தில் கமிட்டாகியிருந்த பிரபல நடிகர் துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்தில் இருந்து முன்னதாக விலகினார். இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து இதே பிரச்சினையால் விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செர்பியா சூட்டிங்கில் அவர் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது அந்த கால்ஷீட் வீணடிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கேள்வி: அடுத்தடுத்து காதலிக்க நேரமில்லை, ஜெனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அவரது அண்ணனின் தனி ஒருவன் 2 படத்திற்கே கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் அவர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தக் லைஃப் படத்தின் சூட்டிங் குளறுபடிகளால் அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இந்தப் படத்தில் கமிட்டானபோது அவர் மிகுந்த உற்சாகத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்திலிருந்து அவர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஜெயம் ரவி முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X