மீண்டும் கேங்ஸ்டராக மிரட்டப் போகும் ஜெயம் ரவி.. அதுவும் வட சென்னை கேங்ஸ்டராம்.. யார் படம்னு பாருங்க!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், அஜித் ஆகிய டாப் நட்சத்திரங்கள் கேங்ஸ்டராக நடித்து வரும் நிலையில் ஜெயம் ரவியும் கேங்ஸ்டர் கதை ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜெயம் ரவி இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் பூலோகம் படத்தில் முதல் முறையாக இணைந்தார். இதில் பாக்ஸராக பட்டையை கிளப்பியிருந்தார் ஜெயம் ரவி.

கேங்ஸ்டர் ரோல்
பாக்ஸிங்குக்கு பின்னணியில் நடக்கும் பாலிடிக்ஸை அத்தனை நேர்த்தியாக சொல்லியிருப்பார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். இந்நிலையில் கல்யாண கிருஷ்ணனின் மற்றொரு படத்தில் கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம்
இதன் மூலம் கல்யாண கிருஷ்ணனுடன் இரண்டாவது முறையாக இணையவுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் கதை வட சென்னையில் உள்ள கேங்ஸ்டர்களை பற்றியது என கூறப்படுகிறது.

டபுள் ஆக்ஷன்
இதில் ஜெயம் ரவி ஒரு பெயரிடப்பட்ட ரோலில் நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி ஏற்கனவே அமீர் இயக்கத்தில் வெளியான ஆதிபகவன் படத்தில் கேங்ஸ்டர் ரோலில் நடித்திருந்தார். அதில் இரட்டை வேடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

விரைவில் அறிவிப்புகள்
இந்நிலையில் தற்போது, கல்யாண கிருஷ்ணனுடனான படத்தில் ஜெயம் ரவி இன்னும் சிறப்பான பர்ஃபாமன்ஸை கொடுப்பார் என தெரிகிறது. படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் தயாரிப்பு தரப்பிடமிருந்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் வரை பிஸி
ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக வரும் மார்ச் மாதம் வரை அவர் பிஸியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











