Actor Jayam Ravi: தனிஒருவன் 2 பட அப்டேட்.. சைரன் பட பிரமோஷனில் அறிவித்த ஜெயம்ரவி!
சென்னை: நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கோலிவுட்டில் மினிமம் கேரண்டி ஹீரோக்களில் ஒருவராக ஜெயம்ரவி உள்ள நிலையில் கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்டில் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அவரது சைரன் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் சிறப்பாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பிரமோஷன்களை படத்தின் ரிலீசையொட்டி ஜெயம்ரவி உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் ஜெயம்ரவி: நடிகர் ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள் மாஸாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அடுத்தடுத்து சிறப்பான இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார் ஜெயம் ரவி. மினிமம் கேரண்டி ஹீரோவாக கோலிவுட்டில் வலம்வரும் ஜெயம் ரவியின் பயணம் ஜெயம் படத்தில்தான் துவங்கியது. தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்திலேயே தன்னுடைய முதல் படத்தில் நடித்த அவர், ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
சைரன் படம்: தொடர்ந்து தற்போதுவரை ஜெயம்ரவி என்றால், அந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். அவரது நடிப்பில் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் சைரன். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. இதனிடையே அடுத்தடுத்த பேட்டிகளையும் ஜெயம்ரவி கொடுத்து வருகிறார். இதன்போது அவரிடம் அதிகமாக கேட்கப்படும் கேள்வியாக தனிஒருவன் 2 உள்ளது.
தனி ஒருவன் 2 படம்: தனி ஒருவன் 2 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னதாகவே செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருவதாக ஜெயம்ரவி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலேயே இன்னும் சில மாதங்களில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஜெயம்ரவியின் அண்ணன் மோகன் ராஜாவே இயக்கவுள்ள நிலையில், படத்தில் மீண்டும் நயன்தாரா ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஜெயம்ரவி நடிப்பில் பிரதர், ஜெனி போன்ற படங்களின் சூட்டிங் நடந்து வருகிறது.
தந்தை -மகள் பாசத்தை சொல்லும் சைரன்: இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள சைரன் படம் தந்தை -மகள் பாசத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும்வகையில் அமைந்துள்ளதாக முன்னதாக பேட்டியில் ஜெயம்ரவி குறிப்பிட்டிருந்தார். இந்த உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுக்கும்வகையில் படத்திற்கு பலமாக ஜிவி பிரகாஷின் இசை அமைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். படத்தின் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் முழு உழைப்பில்தான் இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திருந்த ஜெயம்ரவி, இனி அவர் நல்ல திரைப்படங்களை எடுப்பார் என்றும் பெரிய மேடைகளில் அவரை தொடர்ந்து பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











