Jayam Ravi: பிரதர் சூட்டிங் ஸ்பாட் போட்டோ.. திருமண கோலத்தில் க்யூட் பூமிகா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி -இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் பிரதர். இந்தப் படத்தில் அக்கா -தம்பி உறவை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகியுள்ளன.

Actor Jayam Ravis Brother movie shooting spot photos released

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சில படங்கள் போஸ்ட் புரொடக்ஷன்சில் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார். இந்த ஆண்டில் அவரது பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இறைவன் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. படத்தில் நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாகியிருந்தார்.

பிரதர் படம்: தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி ஓய்வில்லாமல் நடித்து வரும் ஜெயம் ரவி, இயக்குநர் எம் ராஜேஷுடன் இணைந்து பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அக்கா மற்றும் தம்பி இடையிலான உறவை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர். படத்தில் நடிகை பூமிகா அக்காவாக நடித்து வருகிறார். மேலும் படத்தில் பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இறைவன் படம்: இந்தப் படத்தில் காமெடி மற்றும் சென்டிமெண்ட் தூக்கலாக இருக்கும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் டீம் சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இறைவன் படம் ஜெயம் ரவிக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில் இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்: இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படங்களில் மணப்பெண்ணாக பூமிகாவும் அவரது துணையாக நட்டி நட்ராஜூம் காணப்படுகின்றனர். மேலும் புகைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சீதா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்டவர்களும் காணப்படுகின்றனர். மிகவும் கலர்புல்லாக இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன.

பூமிகா ரீ-என்ட்ரி: இந்தப் படத்தின்மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பூமிகா தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் அதே அழகுடன் காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பிரியங்கா, பூமிகா, சரண்யா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்த டான்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X