Jayam Ravi: ஜெயம்ரவியின் அடுத்தடுத்த படங்கள்.. அட இத்தனை படங்களா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இருந்த போதிலும் இறைவன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கைக் கொடுத்தது. இந்த படத்தில் டைட்டில் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் 2024 அவருக்கு மிகவும் சிறப்பாகவே துவங்கியுள்ளது. ஆண்டின் இரண்டாவது மாதத்திலேயே அவரது சைரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

வரும் 16ஆம் தேதி சைரன் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜெயம் ரவி உள்ளிட்டோர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர். படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களையும் பகிர்ந்தனர். சைரன் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

Actor Jayam Ravis next to next movies list and his Siren movie going to release within days

நடிகர் ஜெயம் ரவி: கோலிவுட்டில் நடிகர் ஜெயம் ரவி மினிமம் கேரன்டி ஹீரோவாக பார்க்கப்படுகிறார். அவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றியைப் பெற்றுத் தந்து வருகின்றன. கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்களில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. இதில் பொன்னின் செல்வன் 2 படம் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியாகி மிகச் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது. ஆனால் இறைவன் படம் சொதப்பியது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். படத்தின் கதை சைக்கோ திரில்லர் ஜானரில் வெளியாகி இருந்தது.

Actor Jayam Ravis next to next movies list and his Siren movie going to release within days

சைரன் படம்: இந்த படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு அவருக்கு மிகச் சிறப்பாக துவங்கி உள்ளது/ வரும் 16ஆம் தேதி ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது/ இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பிரமோஷன்கள் தற்போது வெகு சிறப்பான அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு: இதில் பங்கேற்று படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்திருந்தார் ஜெயம் ரவி. இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் சிறப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில படங்களில் அடிதடி என தன்னுடைய பாதை மாறியதாகவும் தற்போது சைரன் படத்தில் குடும்ப செண்டிமெண்ட் உள்ளிட்டவற்றை கதைக்களமாகக் கொண்டு தான் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோர் குறித்தும் அவர் சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தார்.

பிசியான நடிகர்: இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்து வரும் ஹீரோவாக ஜெயம் ரவி மாறியுள்ளார். அவரது சைரன் படம் வரும் 16ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பிரதர், ஜெனி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் அவர் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் அவரது காட்சிகள் மார்ச் மாதத்தில் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம்ரவி கமிட் ஆகி நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

Actor Jayam Ravis next to next movies list and his Siren movie going to release within days

அடுத்தடுத்த படங்கள்: இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். முற்றிலும் காதலை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் தன்னை கமிட் செய்து வரும் ஜெயம் ரவி, அடுத்ததாக தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 மற்றும் ஜனகனமன என்ற ஸ்பை திரில்லர் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். எப்போதும் அதிகமான படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, இந்த 2024 மற்றும் 2025 முழுவதுமே மிகவும் பிசி என்பது அவரது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X