Actor Jayam Ravi: விற்றுத் தீர்ந்த சைரன் படத்தின் சாட்டிலைட் & டிஜிட்டல் ரைட்ஸ்.. அட இவ்வளவு விலையா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சைரன். படத்தில் யோகிபாபுவும், சமுத்திரக்கனியும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. வரும் 16ம் தேதி ரிலீசாகவுள்ள சைரன் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இதுகுறித்து ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் சமூக வலைதளங்களில் அப்டேட் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2, இறைவன் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து நயன்தாராவுடன் ஜெயம் ரவி இணைந்து நடித்திருந்த இறைவன் படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியானது. படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்தடுத்த படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசுக்காக தயாராகி வரும்நிலையில், இன்னும் சில தினங்களில் சைரன் படம் வெளியாகவுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி பல ஆண்டுகளை கடந்து தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இவரது படங்கள் மினிமம் கியாரன்டியுடன் தயாரிப்பாளர்களுக்கு சிறப்பாக அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியான நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இறைவன் படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் சொதப்பியது. சைக்கோ திரில்லராக வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
சைரன் படம்: இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ஜெயம் ரவியின் சைரன் படம் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. வரும் பிப்ரவரி 16ம் தேதி சைரன் படம் ரிலீசாகவுள்ளது. இன்னும் சில தினங்களில் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகவுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் நேற்று வரை என்ற இந்தப் பாடல் ஜெயம் ரவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்த பாடலாக வெளியாகவுள்ளது. இன்று மாலை இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகவுள்ளதாக ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சாட்டிலைட் & டிஜிட்டல் ரைட்ஸ்: இந்தப் பாடலை தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இதன் கிளிம்ப்ஸ் வீடியோவைத்தான் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சைரன் படத்தில் காவல்துறை அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் சிறப்பான விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. 40 கோடிக்கும் அதிகமான தொகைக்கு இந்த உரிமங்கள் கைமாறியுள்ளன.
க்ரைம் திரில்லர் கதைக்களம்: க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள சைரன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது வெறும் வதந்தி என்பதை நிரூபிக்கும் வகையில் படத்தின் திரையரங்க ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் விரைவில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக சைக்கோ திரில்லராக வெளியான இறைவன் படம் ஜெயம் ரவிக்கு கைக்கொடுக்காத நிலையில், சைரன் படம் சிறப்பாக அமையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











