'போக்கிரி ராஜா' ஜீவாவுக்கு 32 வயசாச்சு!

By Super Admin

சென்னை: தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜீவா இன்று தனது 32 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி- மக்ஜாபீன் தம்பதியருக்கு 1984 ம் ஆண்டு ஜனவரி 4 ம் தேதியன்று பிறந்த ஜீவாவின் இயற்பெயர் அமர் சவுத்ரி.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஜீவாவிற்கு நடிகர்கள் உதயநிதி, ஆர்யா, சித்தார்த் மற்றும் ஹன்சிகா ஆகியோர் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஜீவா

ஜீவா

தனது தந்தையின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜீவா. தொடர்ந்து அதே ஆண்டில் இவர் நடித்த தித்திக்குதே படமும் வெளியானது. 2 படங்களும் ஜீவாவின் அறிமுகத்திற்கு உதவியதே தவிர வசூலில் வெற்றி பெறவில்லை.

ராம்

ராம்

2 வருடங்கள் கழித்து 2005 ம் ஆண்டில் வெளியான அமீரின் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் ஜீவாவை நல்ல ஒரு நடிகராக அடையாளம் காட்டியது. தொடர்ந்து வெளியான டிஷ்யூம், ஈ போன்ற படங்களும் ஜீவாவிற்குள் இருந்த சிறந்த நடிகரை வெளிப்படுத்திய படங்களாகவே அமைந்தன.

சிவா மனசுல சக்தி

சிவா மனசுல சக்தி

2009 ம் ஆண்டு ஜீவா, சந்தானம், ராஜேஷ் கூட்டணியில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவிற்கு வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சரியாக 2 வருடங்கள் கழித்து கே.ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ திரைப்படம் ஜீவாவிற்கு மற்றொரு பிளாக்பஸ்டராக மாறியது.

நண்பன்

நண்பன்

கடைசியாக 3 வருடங்களுக்கு முன்னர் வெளியான நண்பன் மற்றும் என்றென்றும் புன்னகை தவிர வேறு படங்கள் எதுவும் ஜீவாவிற்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'யான்' பாக்ஸ் ஆபிஸில் சுத்தமாக எடுபடவில்லை. இதனால் தற்போது ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நடிகர் ஜீவா தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஆர்யா

ஜீவாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஆர்யா "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா! இந்த ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும். எல்லோரும் உனது பார்ட்டிக்காக காத்திருக்கின்றனர்" என்று தனது பாணியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

திருநாள்

திருநாள்

தற்போது திருநாள், போக்கிரிராஜா, கவலை வேண்டாம் மற்றும் ஜெமினி கணேசன் ஆகிய படங்களில் நயன்தாரா, ஹன்சிகா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோருடன் இணைந்து ஜீவா நடித்து வருகிறார். இதில் திருநாள் படம் ஜீவாவிற்கு ஒரு பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த 2016 ம் ஆண்டு ஜீவாவிற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என்று இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X