விஜய்க்கு அந்த அறிவே கம்மிதான்.. மகனுக்கு இருக்கு.. என்ன ஜீவா இப்படி சொல்லிட்டாரு?.. ரசிகர்கள் ஷாக்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு வெளியாகி சுமாரான வரவேற்பையே விமர்சன ரீதியாக பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் விஜய்; தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்த ஜீவா சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

விஜய் என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை கொண்டாடுவார்கள். முக்கியமாக சிறுவர்கள், சிறுமிகளுக்கு விஜய் எப்போதுமே ஃபேவரைட்டாக இருக்கிறார். தனது கரியரின் ஆரம்பத்திலிருந்தே குடும்ப ரசிகர்களை கவரும்படியான விஷயங்கள் தனது படங்களில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் விஜய். ஒருபக்கம் குடும்ப ரசிகர்கள், சிறுவர்கள், சிறுமிகள் மறுபக்கம் இளைஞர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் விஜய்தான் இப்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதன்மையான இடத்திலும் விஜய் இருக்கிறார்.

vijay goat

GOAT: அவரது நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதிலும் வெங்கட் பிரபு திரைக்கதையில் ஏதேனும் புதுமை செய்திருப்பார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றிருந்தனர். ஆனால் வழக்கமான கதை, திரைக்கதையை கொடுத்து ஏமாற்றிவிட்டார் வெங்கட் என்று ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள். அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது என்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கொள்ளை லாபம்தான் என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் கூறுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களமிறங்கவிருக்கிறது. அந்தக் கட்சியின் முதல் மாநில மாநாடு மிக விரைவில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. கட்சியின் கொடியும், பாடலும்கூட அண்மையில் அறிமுகபடுத்தப்பட்டது. இப்படி முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார் அவர். எனவே அடுத்ததாக உருவாகவிருக்கும் தளபதி 69 படம்தான் விஜய்யின் சினிமா கரியரில் கடைசி படம் என்று ரசிகர்களால் கருதப்படுகிறது.

தளபதி 69: அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. படம் பற்றிய அதிகார்ப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் இந்தப் படத்தை வினோத் தரமாக கொடுத்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். முதலில் இந்தக் கதை கமல் ஹாசனுக்கு எழுதப்பட்டது என்று ஒரு பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அஜித், தனுஷ் உள்ளிட்டோரிடமும் இந்தக் கதை சென்றதாகவும்; ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜீவா பேட்டி: இந்நிலையில் விஜய்யுடன் நண்பன் படத்தில் சேர்ந்து நடித்த ஜீவா ஒரு பேட்டியில், "ஒருமுறை ஐபிஎல் நடக்கும்போது விஜய் வந்திருந்தார். அப்போது ஒரு பவுண்டரி போனது. அதனைப் பார்த்துவிட்டு என்னிடம் இது ஃபோரா, சிக்ஸா என்று கேட்டார். உடனே நான் அவரிடம், 'அண்ணா இந்த ஐபிஎல்லுக்கு நீங்கள்தான் பிராண்ட் அம்பாஸடர்' என்றேன். விஜய்க்கு அப்போது கிரிக்கெட் அறிவு கம்மிதான். ஆனால் அவரது மகன் ஜேசன் சஞ்சய்க்கு கிரிக்கெட் ரொம்பவே பிடிக்கும். நாங்கள் நடத்திய சிசிஎல் போட்டிக்கு இரண்டு, மூன்றுமுறை வந்து ஆதரவு தெரிவித்தார்" என்றார். முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸடராக விஜய் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X