Junior NTR: ரிலீஸ் தள்ளிப்போகும் ஜூனியர் என்டிஆர் படம்.. அட இதுதான் காரணமா?

ஐதராபாத்: தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தெலுங்கு பட உலகின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் ஜூனியர் என்டிஆர். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்திருந்தார் ஜூனியர் என்டிஆர். படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ஆஸ்கர் விருதையும் குவித்தது. இந்நிலையில் முன்னதாக ஆச்சாரியா படத்தை இயக்கிய கொரட்டாலா சிவா இயக்கத்தில் தற்போது ஜூனியர் என்டிஆர் தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் அவர் தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய என்ட்ரியை பதிவு செய்துள்ளார். முன்னதாக படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மிரட்டலாக அமைந்திருந்தது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போகவுள்ளதாக தெரிகிறது.

Actor Junior NTRs Devara movie release postpone to August it seems

நடிகர் ஜூனியர் என்டிஆர்: டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். பிரபல நடிகர் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்டிஆரின் மகன் என்ற அடையாளம் இவருக்கு இருந்தபோதிலும் தன்னுடைய திறமை, அழகு, மற்றும் நடிப்பு ஆகியவற்றின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். ஜூனியர் என்டிஆருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மிகச் சிறப்பான அடையாளத்தை சர்வதேச அளவில் கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் ஜூனியர் என்டிஆர்ஐ இந்தப் படம் வெளிப்படுத்தியுள்ளது.

தேவரா படம்: ஆர்ஆர்ஆர் படத்தை பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கியிருந்த நிலையில் படம் ஆஸ்கார் விருதையும் அள்ளியது. இந்நிலையில் ஆச்சாரியா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் தற்போது ஜூனியர் என்டிஆர், தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் தென்னிந்தியாவில் தன்னுடைய அறிமுகத்தை செய்ய உள்ளார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்விகபூருடன் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

கிளிம்ப்ஸ் வீடியோ: படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியது. படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. மிரட்டலான வகையில் அமைந்திருந்த இந்த கிளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களின் ஏராளமான பாராட்டுக்களை குவித்துள்ளது. அச்சத்தை கொடுக்கும் கடல் அலைகளுக்கு நடுவில் நடக்கும் ஆக்ஷன் சீக்வென்சை இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளிப்படுத்தியது. கடல் ரத்த சிவப்பு நிறமாக இருப்பதால்தான் அது செங்கடல் என்று ஜூனியர் என்டிஆர் கூறுவதாக இந்த வீடியோவில் காணப்பட்டது.

தேவரா பட அப்டேட்: இதனிடையே தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் வரும் 16ஆம் தேதி துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போக உள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அடுத்த கட்ட ஷூட்டிங்கில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல்களின் சூட்டிங் இன்னும் திட்டமிடப்படவில்லை. அடுத்தடுத்த ஷெட்யூல்களில் படத்தின் பாடல்கள் எடுக்கப்படும் என்று தெரிய வருகிறது படம் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போவதாக கூறப்படும் தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X