Actor Kamal haasan: நான் செத்ததுக்கு பிறகும்.. படத்தின் சக்சஸ் குறித்து பேசிய உலகநாயகன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் மிகப்பெரிய நடிகராக பார்க்கப்படுகிறார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவர் சிறப்பாக பயணித்து வருகிறார். சின்ன சின்ன தொழில்நுட்ப விஷயங்களிலும் அவர் கவனம் செலுத்துபவராகவும் சினிமாவின் என்சைக்ளோபீடியாவாகவும் பார்க்கப்படுகிறார். அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து பல நடிகர்கள் இந்திய அளவில் செயல்பட்டு வருவதாக பல்வேறு தருணங்களில் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அவர் ஒரு படத்தின் சக்சஸ் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றில் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை பெற்று வருகிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு படங்களை தயாரித்து வருகிறார். முன்னதாக அவரது தொகுப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.

 Actor Kamal haasan opens up on success of movies in his speech

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என சினிமாவின் பல்வேறு தளங்களில் சிறப்பாக பயணித்து வருகிறார். தொழில்நுட்ப விஷயங்களிலும் இவர் காட்டும் அக்கறை மற்றும் கவனம், அவரது படங்களில் பணிபுரியும் அனைவரையும் கவனத்துடன் செயல்பட வைத்து வருகிறது, அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தற்போது தயாரிப்பு மற்றும் நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார், அந்த வகையில் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் சிம்புவின் எஸ்டிஆர் 48 படங்களை தயாரித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்: நடிகராக இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். இந்த படங்களை தொடர்ந்து கல்கி 2898 AD படத்தில் பிரபாஸ் வில்லனாகவும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பா ரஞ்சித் உள்ளிட்டவர்களின் இயக்கங்களிலும் நடிக்க உள்ளார். முன்னதாக ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

இளம் நடிகர்களுக்கு உத்வேகம்: சினிமாவை பொருத்தவரை சர்வதேச அளவில் அனைவருக்கும் உத்வேகமாகவும் பாடமாகவும் இருந்து வருகிறார் கமல்ஹாசன். இவரை மற்றும் இவரது நடிப்பை இன்ஸ்பிரேஷனாக வைத்து பல நடிகர்கள் சினிமாவில் நுழைந்ததாக பல்வேறு தருணங்களில் தங்களது உற்சாகத்தை பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசனின் படங்கள் விமர்சனரீதியாக அதிகமாக வெற்றி பெற்று வருகின்றன. இதனிடையே பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒரு படத்தின் சக்சஸ் என தான் பார்ப்பது எதை என்று அவர் இந்த பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் சக்சஸ் குறித்து கமல்ஹாசன்: தனக்கு பிறகும் தன் சாவிற்கு பிறகும் தன்னுடைய படங்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதைத்தான் தான் சக்சஸாக பார்ப்பதாகவும் இந்த பேச்சில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் வெற்றி என்பது வெறுமனே வசூல் மட்டுமல்ல என்பதையும் அவர் தன்னுடைய பேச்சில் சுட்டிக்காட்டி உள்ளார். நான்கு பைட், நான்கு பாடல் என கமர்சியலாக படங்களை வெற்றி பெற செய்து வரும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு கமல்ஹாசனின் இந்த பேச்சு கண்டிப்பாக ஒரு பாடமாக அமையும். தமிழ் சினிமாவில் முன்னதாக பல சோதனை முயற்சிகளையும் கமல்ஹாசன் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X