Actor Kamal haasan: குணா படத்திற்கு கமல் வைக்க நினைத்த டைட்டில்.. எல்லாருமே நோ சொன்ன சம்பவம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1991ம் ஆண்டில் தமிழில் வெளியான படம் குணா. இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் மிகவும் ஆபத்தான ஒரு குகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அந்த குகைக்கு குணா குகை என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் தற்போது வெளியாகி உள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகையில் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தை சமீபத்தில் படக்குழுவினருடன் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த உரையாடலின் போது குணா படத்தின் சூட்டிங் மற்றும் அந்த குகையின் ஆபத்து நிறைந்த சூழல் ஆகியவற்றை அவர் மஞ்சுமெல் பாய்ஸ் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார். சந்தான பாரதி இயக்கத்தில் குணா படம் உருவான நிலையில், தற்போது கமல் -மஞ்சுமெல் பாய்ஸ் டீம் சந்திப்பின்போது சந்தான பாரதியும் உடனிருந்தார். மேலும் படத்தின் பல்வேறு சுவாரஸ்யங்களையும் சந்தான பாரதி அடுத்தடுத்த பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.

Actor Kamal haasan s suggested title for Guna movie before it was finalized

குணா படம்: கடந்த 1991ம் ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளியான படம் குணா. சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், ரேகா ரோஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானலின் காடுகளில் படமாக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட மலைக் குகையில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பின்னாளில் அந்த குகைக்கு குணா குகை என்று பெயரிட காரணமாக அமைந்தது. இந்த குகையை கண்டறிவதற்காக கொடைக்கானலில் இருந்து ஏழெட்டு கிலோமீட்டர் மலைகளில் நடந்து சென்று அந்த லொகேஷனை கண்டறிந்ததாக தனது சமீபத்திய பேட்டியில் படத்தின் இயக்குனர் சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்: கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இந்த குகையில் தான் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த குகையில் அந்த பாடலை எடுக்க வேண்டாம் என்று தான் கமலுடன் வாக்குவாதம் செய்ததாகவும் சந்தான பாரதி தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த குணா குகையை சுற்றி தான் படத்தின் கதை பெரும்பாலும் நடத்தப்பட்டது. 33 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இந்த குகைக்குள் தான் எடுக்கப்பட்டது. இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களை கவரத் தவறியது இருந்த போதிலும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

மோசமான குகை: அந்த லொகேஷனை கண்டறிவதற்காக ஒரு நான்கு பேர் மட்டுமே சென்ற நிலையில் அப்போதே அந்த குகையை கண்டறிவது மற்றும் அங்கு இறங்கி செல்வது மிகவும் கடினமாக இருந்த நிலையில் அந்த இடத்தில் பாடல் சூட்டிங்கை மேற்கொள்வது மிகவும் சிரமம் என்று சந்தான பாரதி கமல் உள்ளிட்ட டீமுடன் விவாதித்துள்ளார். பாடல் சூட்டிங்கிற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட நூறிலிருந்து 200 பேர் இருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த பாடல் காட்சியை குணா குகையில் எடுப்பது பாதுகாப்பாக இருக்காது என்றுதான் சந்தான பாரதி இந்த பாடல் ஷூட்டிங்கை குணா குகையில் எடுக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

கண்மணி பாடல் சூட்டிங்: ஆனால் அவரிடம் பேசிய கமல்ஹாசன் சரியான பாதுகாப்பு இருந்தால் இந்த படப்பிடிப்பை அந்த இடத்தில் எடுக்கலாமா என்று கேட்டதாகவும் அவர் ஓகே சொல்ல ப்ரொடியூசரிடம் பேசி வனத்துறை அதிகாரிகளிடம் போதுமான பாதுகாப்புகளை தயார் செய்து விட்டு அந்த பாடலை அங்கே படம் பிடித்ததாகவும் இயக்குனர் சந்தான பாரதி தெரிவித்துள்ளார். குணா படம் மற்றும் கண்மணி அன்போடு காதலன் பாடலும் தற்போது 33 ஆண்டுகள் கழித்து ஏராளமான ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளது. அதற்கு சமீபத்தில் வெளியான மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் படம் காரணமாக அமைந்துள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் படம்: இந்த படத்திற்காக குணா குகையில் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. படத்தில் கண்மணி அன்போடு பாடலும் இடையில் சேர்க்கப்பட்டு ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.. மலையாளத்தை காட்டிலும் இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழில் வெளியாகாமல் மலையாளத்தில் வெளியாகியுள்ள போதிலும் தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இந்த படம் உரியதாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து மஞ்சுமெல் பாய்ஸ் குழுவினர் உரையாடியுள்ளனர். இந்த உரையாடலின் போது குணா குறித்த பல்வேறு சுவாரசியங்களை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

மதிகெட்டான் சோலை டைட்டில்: இந்த படத்திற்கு முன்னதாக மதிகெட்டான் சோலை என்று பெயர் வைக்க வேண்டும் என்று தான் கூறியதாகவும் ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் வேண்டாம் என்று கூறியதாகவும் இறுதியில் குணா என்ற தலைப்பே இறுதி செய்யப்பட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் ஹேராம் படத்தில் ஒரு காட்சியில் காட்டப்படும் குரங்குகளின் மண்டையோடுகள் குணா குகையில் இருந்து தான் எடுத்தவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பள்ளத்தில் விழும் குரங்கு குட்டிகள் வெளியே வர முடியாமல் அங்கேயே உயிரிழந்து விடும் என்றும் மிகவும் ஆபத்தான ஒரு இடம் என்றும் அவர் தனது உரையாடலின் போது பகிர்ந்துள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தற்போது படக்குழுவினருடன் இணைந்து பார்த்துள்ள நடிகர் கமல்ஹாசன், தன்னுடைய பாடல் எப்போது வரும் என்று தான் காத்திருந்ததாக மற்றொரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X