twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்க் காற்றின் சுகந்தம்... கண்ணதாசன் குறித்து கமல் பாராட்டு!

    |

    சென்னை : கவிஞர் கண்ணதாசன் சிறப்பான பல பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர்.

    தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்தவர். பல விருதுகளையும் பெற்றவர்.

    பிக் பாஸ் 5: இங்க அரசியல் இருக்கு என சூசகமாக பேசும் கமல்.. இவங்களாம் ஸ்ட்ராட்டஜி பண்றாங்களாம்!பிக் பாஸ் 5: இங்க அரசியல் இருக்கு என சூசகமாக பேசும் கமல்.. இவங்களாம் ஸ்ட்ராட்டஜி பண்றாங்களாம்!

    இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கண்ணதாசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன்

    நடிகர் கமல்ஹாசன்

    நடிகர் கமல்ஹாசன் பல படங்களில் நடித்துள்ளவர். தற்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பல நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

    கண்ணதாசன் குறித்து பாராட்டு

    கண்ணதாசன் குறித்து பாராட்டு

    இந்நிலையில் கவிஞர் கண்ணதாசன் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். கண்ணதாசன் தமிழ்க் காற்றின் சுகந்தம் என்று அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் காட்சியை கேட்ட மறுநொடி கவியரசுக்கு கவிதை வியர்த்துக் கொட்டிவிடும் என்றும் கூறியுள்ளார். தத்தகாரம் தரும்வரை அதை தடுத்து வைத்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.

    புகழ்பாடும் வழக்கம்

    புகழ்பாடும் வழக்கம்

    கவிஞரின் வரிகளில் அன்றாடம் லயித்திருப்பதும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவர் புகழ் பாடுவதும் தன்னுடைய வழக்கம் என்றும் கமல் தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனின் வரிகள் எப்போதுமே ரசிகர்களின் மனதிற்கு இதமான சுகத்தை தருபவை. அதை தற்போது கமல் வெளிப்படுத்தியுள்ளார்.

    ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள்

    ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள்

    கவிஞர் கண்ணதாசன் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு ஆன்மீகக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் இருந்துள்ளார்.

    சாகித்ய அகாடமி விருது

    சாகித்ய அகாடமி விருது

    சேரமான் காதலி படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதையும் கண்ணதாசன் பெற்றுள்ளார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், கண்ணதாசன் உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 1981ல் உயிரிழந்தார்.

    கண்ணதாசனுக்கு மணிமண்டபம்

    கண்ணதாசனுக்கு மணிமண்டபம்

    இவரது மறைவு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இழப்பாக உள்ளது. இவருக்கு காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த மண்டபம் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதில் கவிஞரின் மார்பளவிலான சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Actor Kamal praise Kavignar Kannadasan in his twitter page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X