போடு வெடிய.. ஆஸ்கரில் கமல்ஹாசன்.. உச்சபட்ச கௌரவம்.. குவியும் வாழ்த்து

சென்னை: இந்திய சினிமாவில் முக்கியமானவர் கமல்ஹாசன். 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர்; சினிமாவில் சம்பாதிப்பதை மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்பவர். மேலும் எந்த டெக்னாலஜியாக இருந்தாலும் தன்னுடைய படத்தில் அதை முயற்சி செய்து பார்த்துவிடுபவர். இப்போதும் பிஸியான ஹீரோவாக நடித்து வரும் அவர் கடைசியாக தக் லைஃப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன், ஆண்டவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். சிறு வயதிலிருந்தே தன்னை சினிமாவுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அவரை கே.பாலசந்தர் ஹீரோவாக அறிமுகம் செய்துவைத்தார். குழந்தை நட்சத்திரமாக எப்படி கலக்கினாரோ அதேபோல் கதாநாயகனாகவும் பட்டையை கிளப்பி டாப் ஹீரோவாக வலம் வந்தார். ரஜினி நடிக்க வரும்போதெல்லாம் கமல் சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருந்தார் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

வித்தியாச முயற்சிகள்: நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, பாடல்கள் பாடுவது, எழுதுவது, நடனம் என அத்தனையிலும் மாஸ்டராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தனது படத்தில் ஏதேனும் ஒரு வித்தியாசமான முயற்சியை செய்துபார்ப்பது அவரது வழக்கம். அதன் கரணமாகத்தான் 80களிலேயே அவரால் விக்ரம், அபூர்வ சகோதரர்கள் என பல வித்தியாசமான படங்களை செய்ய முடிந்தது. இன்னமும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சினிமாவிலிருந்து விலகல்: பீக்கில் சென்றுகொண்டிருந்த அவர் அரசியலில் தடம் பதித்தார். அதன் காரணமாக சினிமாவிலிருந்து அவர் சிறிது காலம் விலகும் சூழல் ஏற்பட்டுவிட்டது. பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் உற்சாகமடைந்த அவர் அதே உற்சாகத்தோடு ஷங்கர் இயக்கத்தி இந்தியன் 2 படத்தில் நடித்தர. ஆனால் படமோ படுதோல்வியையும் கடுமையான ட்ரோலையும் சந்தித்தது.

Actor kamalhaasan is invited to join the Oscars Academy as a Member
Photo Credit:

தக் லைஃப் கமல்: அந்த ட்ரோலை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். எனவே அதை சரிசெய்யும் நோக்கத்தில் தக் லைஃப் படத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்தார். இன்னொரு நாயகன் படத்தை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது அந்தப் படம். இந்தியன் 2 போலவே இப்ப்டத்தையும் கடும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

கமலுக்கு கிடைத்த கௌரவம்: இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மெம்பராக இருப்பதற்கு கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிற்து. இந்திய திரைத்துறையிலிருந்து கமல், ஆயுஷ்மாஅன் குரோனா உள்ளிட்டோருக்கு இந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. மொத்தம் 534 உறுப்பினர்கள் இதில் இருப்பார்கள். அவர்கள் ஆஸ்கர் ரேஸில் இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்று வெற்றியாளர்களை தீர்மானம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகாடெமி மெம்பராக அழைப்பை பெற்றிருக்கும் கமலுக்கு இது உச்சபட்ச கௌரவம் என்று தமிழ் திரைத்துறையினவர் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X