முதல் முறையாக இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்ற கமல்.. இசைஞானியுடன் சந்திப்பு.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இசைஞானி இளையராஜாவை சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக கோலொச்சி வருபவர் இசைஞானி இளையராஜா.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக..

35 ஆண்டுகளுக்கும் மேலாக..

இதுவரை 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, பத்ம விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் செய்து வந்தார் இளையராஜா.

பிரசாத் ஸ்டுடியோவுடன் மோதல்

பிரசாத் ஸ்டுடியோவுடன் மோதல்

ஆனால் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டுடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இளையராஜா ஸ்டுடியோ

இளையராஜா ஸ்டுடியோ

இதனை தொடர்ந்து தியாகராயநகரில் உள்ள எம்எம் தியேட்டரை தனது ரெக்கார்டிங்க ஸ்டுடியோவாக மாற்றினார் இளையராஜா. சொந்தமாக தொடங்கியுள்ள ஸ்டுடியோவில் பல்வேறு படங்களுக்கான இசைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் இளையராஜா.

இளையராஜாவை சந்தித்த கமல்

இளையராஜாவை சந்தித்த கமல்

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்துள்ளார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு முதல் முறையாக சென்ற நடிகர் கமல்ஹாசன் அவரை சந்தித்து பேசினார். நடிகர் கமல் ஹாசன் காலணியை வெளியே கழட்டிவிட்டு இளையராஜாவின் ஸ்டுடியோவிற்குள் சென்றார்.

பூங்கொத்து கொடுத்த கமல்

பூங்கொத்து கொடுத்த கமல்

இளையராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்த நடிகர் கமல்ஹாசன், அவருடன் அமர்ந்து நீண்ட நேரம் பேசினார். மேலும் இருவரும் ஸ்டுடியோவுக்குள் அமர்ந்து பேசும் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸில் பிஸியாகும் கமல்

பிக்பாஸில் பிஸியாகும் கமல்

நடிகர் கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு வாரங்களில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார் கமல். இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

இளையராஜாவை சந்தித்த ரஜினி

இளையராஜாவை சந்தித்த ரஜினி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்றார். ஒரே நாளில் இரண்டு முறை அடுத்தடுத்து சென்றார். இளையராவின் ஸ்டுடியோவுக்குள் சென்றது கோவிலுக்குள் சென்ற உணர்வை தந்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X