வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்.. ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்? கமல்ஹாசன் கவிதை!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Chennai Corporation pastes home quarantine sticker in front of Kamal's house.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. பெரும் பெரும் வல்லரசு நாடுளே கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

உலகளவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியிருக்கிறது. 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சூழ்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தக் கவிதை,

அந்தக் கவிதை,

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?

ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?

ரோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?

தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?

வாழ்...

ஏழ்மை இழிவன்று

அது செல்வத்தின் முதல் படி.

தாகத்துடன் நட, தடாகம் தென்படும்

மோகமும், சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று

போவதும், வருவதும் போக்குவரத்தன்றி

வேறென்ன சொல்லு

தோழா/தோழி

தமிழ் ஆளுமை

கமல்ஹாசனின் இந்த கவிதையை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். அருமையான கருத்து. என்னவொரு தமிழ் ஆளுமை என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். கமலின் கவிதையை பார்த்த இவர் சரியாக எடுத்தியம்பினீர்கள் நம்மவரே...! என்று கூறியுள்ளார்.

தலைவன் தெரிவான்

தாகத்துடன் நட, தடாகம் தென்படும். நமது வாழ்க்கையில் அனைத்தும் பார்த்து ,பட்டு, ரசித்து, சுவைத்த நாம், பார்க்காத ஒன்று இருக்கிறது. அது நமக்குள் இருக்கும் ஏமாற்றம். நேர்த்தியாக ஆராய்ந்தால் அடுத்த வழி தெரியும். நேர்மையாக ஆராய்ந்தால் நல்ல தலைவன் தெரிவான் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X