சினிமாவுக்கே இவர் தான் மான்ஸ்டர்.. தக் லைஃப் எப்படி இருக்க போகுதோ.. யாருடன் சந்தி்பபு தெரியுமா?
சென்னை: இந்திய திரையுலகை பிரம்மிக்க வைத்த நாயகன் கமல்ஹாசன். இவர் இயக்கும் படங்களில் புதுமைகள் ஏராளம் கொட்டி கிடக்கின்றன. ரசிகர்களை சோர்வடைய செய்யாத முயற்சிதான் இன்று அவரை உத்வேகப்படுத்திக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் என்ற பெயருக்கு பின்னால் தமிழ் சினிமாவில் பல யுகங்களை படைத்த நாயகன் என்பதே அவருக்கு பொருத்தமாக இருக்கும். எதிலும் ஒரு தெளிவு, பேச்சு மட்டும் விவகாரம் மற்றபடி அவர் பர்பெக்ட் என்றே சொல்வார்கள். தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை வியக்கும் அளவிற்கு ஒருவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக இன்னும் கூடுதலான விசயங்களை இதில் காணலாம்.
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி இப்போது வரை கமல்ஹாசன் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்றே சொல்லலாம். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது வேறு அவரை தவிர யாரும் இந்த கதாப்பாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்பது கமல்ஹாசன். சினிமாவிற்கு அவர் இன்னும் இளமையான பையன்தான். நடிப்பதில் இருந்து படங்கள் தயாரிப்பது முதல், தயாரிப்பது வரை புதுமை தான். உலக சினிமாக்களை கண்டு வியந்து கொண்டிருந்த நேரத்தில் இங்கு ஒருவர் அதே போன்ற கிளாசிக், கல்ட் படங்களை இயக்கி நடித்துக்கொண்டிருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு புரிந்த மொழியில் சினிமா பாடம் எடுத்தவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி இருப்பது மன்மத லீலை போன்ற படங்களால் தான். ஒரு நாயகன் அப்பழுக்கற்றவனாக இருக்க வேண்டும். இந்த சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற சலங்கை ஹீரோவின் கால்களில் கட்டப்பட்டிருக்கும். ஆனால், மன்மதலீலை படத்தில் ஒரு நாயகன் என்ற பிம்பத்தை உடைத்து, சாதாரண மனிதனின் மூளை இதுபோன்ற சபல புத்திகளுக்கும் இடம் கொடுக்கும். கேடுகெட்ட செயல்களையும் செய்பவனாக கமல் நடித்திருப்பார். இப்படியான படங்கள் மூலமே மக்களின் தன்மையை அறிந்து பெரும் ஆற்றலை பெற்றிருக்கிறார் கமல். தான் படித்த இலக்கியங்கள், திரைமொழியில் கவிதையாக படைத்திருப்பார். கமலுடன் இளம் நடிகர்கள் போட்டி போடுவது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஹே ராம்: மகாத்மா காந்தியை பற்றி பல வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வந்து விட்டன. அவரை பற்றிய படங்கள் எடுப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பது ஹே ராம். இப்படத்தை நடிகர் மணிகண்டன் பலவித கோணங்களில் விவரித்து பேசியிருப்பார். நடிகர் ரஜினி இப்படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்த படம் என்றும் கூறியிருப்பார். நடிகை த்ரிஷாவிற்கு பிடித்த படங்களின் லிஸ்டில் ஹே ராம் தான் முதலிடமாக இருக்கிறது. இப்படம் தொடங்கும் போதே கருப்பு வெள்ளை நிறத்தில் தொடங்கி பிறகு வண்ணமயமாக மாறும். கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காக கருப்பு வெள்ளை காட்சிகள் இடம்பெறும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் காந்தி இறந்து விடுவார். அப்போது இந்த உலகமே இருண்டு போனது போல் படத்தின் காட்சியும் கறுப்பு வெள்ளைக்கு மாறும். அதுவரை வண்ணமயமாக இருந்தவை எல்லாம் இருண்டுவிட்டது என்பதை குறிப்பிட்டிருப்பார்.

தொடாத பக்கங்கள்: கமல் பல அவதாரங்களின் மன்னன் தான். மாற்று மொழியில் இருந்து ஒரு படத்தை ரீமேக்காக மாற்றும்பொழுது அப்படத்தை அப்படியே தழுவி எடுப்பதில்லை. மாறாக கதையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி போன்ற படங்கள் ரீமேக் வகை படங்கள் தான். ஆங்கில படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் இடம்பெறும் ஆனால் திரைக்கதையில் மாற்றம் நிகழ்ந்திருக்கும். 90களில் ஆக்சன் படங்களில் இருந்து காமெடி படங்களுக்கு மாறியவர் கமல்ஹாசன். படத்தில் டைமிங் காமெடிகளை பற்றி குறிப்பிடுவார்கள், பஞ்சதந்திரம் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் அனைத்தும் டைமிங் காமெடிகள் தான். ஆக்சன் இல்லாத காமெடி படங்களில் பம்மல் கே சம்பந்தம், தெனாலி, பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் வரை சொல்லலாம்.
சினிமாவில் புதுமை: ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் எந்தவித சாயம் பூசப்படாத புதுமையான படைப்பை கமலிடம் பார்க்கலாம். டெக்னாலஜி டெக்னாலஜி என்று கத்தி பேசுபவர்களுக்கு மத்தியில் தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் அதனை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். 1995இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குருதிப்புனல் படத்தில் முதன் முதலாக இந்திய அளவில் dolby atmos sound தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். படத்தொகுப்பில் இன்று வரை பயன்படுத்தப்படும் avid சாஃப்ட்வேர் செயலியை முதன்முதலில் 1994இல் தனது மகாநதி படத்தில் பயன்படுத்தியிருந்தார். விருமாண்டி படத்தை சூட்டோடு சூடாக லைவ் எடிட்டிங் மற்றும் லைவ் சவுண்ட் காட்சிகளில் எடுக்கப்பட்டிருக்கும். விருமாண்டியை மறக்க முடியுமா. அதில் ஒரு வசனம் இருக்கிறது மன்னிக்கிறவன் மனுசன், மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுசன் இது இன்றைக்கும் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் வசனம். அதனால், தான் அவரை விண்வெளி நாயகன் என்கிறோம். அதேபோன்று மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற நீ நீல வானம் பாடலை யாராலும் பீட் செய்ய முடியாத கலைவண்ணம். அப்பாடலை இப்போது பார்த்தாலும் புதுமைதான்.

ஏ.ஐ. தொழில்நுட்பம்: இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்ப்ளெக்ஸிட்டி ஏ.ஐ. தலைமையகத்திற்கு சென்று அதன் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் ஶ்ரீனிவாஸை சந்தித்துப் பேசியிருக்கிறார். எதிலும் புதுமையை படைக்கும் கமல்ஹாசன் தற்போது ஏ.ஐ சார்ந்த விஷயங்களில்அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், ஏ.ஐ தொடர்பான படிப்புகளையும் படித்து வந்ததாகத் தகவல் வெளியானது. இந்த சந்திப்புக்கு பிறகு தனது சமூகவலைதள பக்கத்தில், "சினிமாவில் இருந்து சிலிக்கான் வரை பரிணமித்து கொண்டிருக்கிறது. ஆனால், தேடல் தொடர்பான தாகம் தீரவில்லை. அதன் பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சான்பிரான்சிஸ்கோவில் அரவிந்த் ஶ்ரீனிவாஸை சந்தித்தேன். அவரின் திறன்மிக்க குழுவினர் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள்" என பதிவிட்டிருக்கிறார்.

அரவிந்த் நெகிழ்ச்சி: இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட அரவிந்த் ஶ்ரீனிவாஸ், சினிமாவில் புதுமையை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கமல்ஹாசனை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். திரைப்படத்துறையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை கொண்டு வர நீங்கள் எடுக்கும் முயற்சி பாரட்டக்குறியது. நீங்கள் நடித்து வரும் தக் லைஃப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மேலும், இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆண்டவா நீ இருக்கும் இடம் தான் ஏ.ஐ., தமிழ் சினிமாவிற்கு உங்களை விட பெரிய ஏ.ஐ . இருக்க முடியுமா என தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











