Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலியா...இது தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுவீங்க
சென்னை : நடிகர் கார்த்தி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா வாயிலாக கார்த்திக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனான கார்த்தி, மெகானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். படிப்பை முடித்த பிறகு சென்னையில் இன்ஜினியரிங் கன்சல்டன்டாக பணியாற்றினார். கார்த்தி வாங்கிய முதல் சம்பளம் ரூ.5000. இதை அவரே தனது பேட்டிகள் பலவற்றில் கூறி உள்ளார்.
கமல் ஸ்டண்ட் காட்சி பார்த்து மயங்கி விழுந்தேன்..இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!!

கார்த்தியின் படிப்பு
பெரிய நடிகரின் மகனாக இருந்தும் கடும் முயற்சிக்கு பிறகு ஸ்காலர்ஷிப் பெற்று, அதன் மூலம் அமெரிக்காவிற்கு சென்று மேல் படிப்பை தொடர்ந்தார் கார்த்தி. நியூயார்க்கில் Binghamton பல்கலைக்கழகத்தில் இன்டர்ஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மேல்படிப்பு முடித்தார். அதோடு இயக்குநர் கோர்சும் படித்தார் கார்த்தி. படித்துக் கொண்டே பார்ட் டைமாக கிராபிக் டிசைனராகவும் பணியாற்றினார்.

சிவக்குமார் போட்ட கன்டிஷன்
சிறு வயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்ட கார்த்தியிடம் சினிமாவில் சேருவதற்கு முன் நல்ல கல்வியை பெற வேண்டும் என சிவக்குமார் கன்டிஷன் போட்டதாக கார்த்தி கூறி உள்ளார். முதலில் மணிரத்னத்திடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய கார்த்திக்கு, பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே பிளாக்பஸ்டர் படமாக அமைந்து, விருதும் கிடைத்ததால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர் மாஸ் ஹிட்
ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என வரிசையாக கார்த்தி நடித்த அத்தனை படங்களும் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன், கார்த்தி 24, கார்த்தி 25 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் இந்த ஆண்டில் ரிலீசாக உள்ளன.

சத்தமில்லாமல் சமூக பணி
சினிமாவில் பயங்கர பிஸியாக இருந்தாலும் சத்தம் இல்லாமல் சமூக பணியும் செய்து வருகிறார் கார்த்தி. தனது 31வது பிறந்தநாளில் மக்கள் நல மன்றம் என்ற அமைப்பை துவக்கி, அதன் மூலம் ரத்த தானம், பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகளுக்கு உதவி வருகிறார் கார்த்தி. தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் கார்த்தி.

கொண்டாடும் ரசிகர்கள்
உழவன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை துவக்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி, பல கிராமங்களில் கால்வாய், ஏரிகளை தூர்வாரி உள்ளார். விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். கார்த்தி பற்றி முழுவதும் தெரிந்தவர்கள் அவரை கொண்டாடி, வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது.