twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மருத்துவரின் இறுதிச்சடங்கை தடுத்தது.. தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவு.. ட்விட்டரில் விலாசிய கார்த்தி !

    |

    சென்னை : நடிகர் கார்த்தி ட்விட்டரில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல், இறுதிசடங்கை தடுத்தவர்களை விளாசியுள்ளார்.

    Recommended Video

    மருத்துவர்கள ஏன் அடக்கம் பன்ன கூடாது?| மக்களை கேள்வி கேட்ட பிரபலங்கள்

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மக்கள் மனதில் அளவுகடந்த பீதியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்று பயத்தைவிட அதன் மூலம் பரவும் அச்ச உணர்வே மேலோங்கி உள்ளது. அந்த பயத்தின் விளைவுதான் சென்னை மருத்துவரின் இறுதிச்சடங்கில் நடந்த கலவரம்.

    Actor Karthi expresses regret stopping of doctor simon funeral

    மருத்துவர் கொரோனோ தாக்கத்தால் உயிரிழந்தார். இவரது உடல் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு இறுதி சடங்கிற்காக எடுத்து செல்லபட்டது. இந்த நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸை மறித்து உடலை இங்கு அடக்கம் செய்ய கூடாது என்று கூறி ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த டிரைவரையும் வாகனத்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டு கோபமும் வேதனையும் அடைந்துள்ள நடிகர் கார்த்தி ட்விட்டரில் 'டாக்டர் அவர்களின் இறுதிச் சடங்கை நடத்தவிடாமல் இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டீர்கள். இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், டாக்டர் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மிக மன வருத்ததுடன் கூறியுள்ளார் .

    Actor Karthi expresses regret stopping of doctor simon funeral

    கார்த்தி கூறிய இந்த வார்த்தைகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவாது, அந்த உடலேயே இறந்துவிடும் என தமிழக அரசு முதல் உலக சுகாதார மையம் வரை தெரிவித்து வரும் நிலையில். இப்படியொரு, சம்பவம் நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இப்படி பட்ட சம்பவம் சென்னையில் நடந்திருப்பது முதல் முறை அல்ல உலகம் முழுவதும் மக்கள் பலரும் அச்சத்தினால் இது போன்ற பல வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இது தமிழ் நாட்டில் அதுவும் படித்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் நடந்திருப்பது தான் வருத்தத்திற்குரியது.

    Actor Karthi expresses regret stopping of doctor simon funeral

    இந்த சம்பவம் தொடர்பாக கார்த்தி முன் வந்து பேசியிருப்பது பாராட்டுகளை பெற்று தந்துள்ளது இதே போல் பல பிரபலங்களும் மருத்துவர் மரணம் குறித்தும், அது தொடர்பாக ஏற்பட்டுள்ள வன்முறை குறித்தும் சமூக வளைத்தலங்களில் பேசி வருகின்றனர். மக்களுக்கும் இதை பற்றிய பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    English summary
    Actor Karthi expresses regret stopping of doctor simon funeral
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X