பல படங்களை கைவசம் வைத்திருக்கும் கார்த்தி… மனுஷன் எப்போதான் ரெஸ்ட் எடுப்பாரோ!
சென்னை : தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமிக்கும் அளவுக்கு பல படங்களில் தனது கெட்டப்பை மாற்றி நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகர் கார்த்தி.
நடிகர் சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்களோடு சினிமாவில் நுழைந்தாலும், அவரது நடிப்பு திறமையும், அவருக்கு சினிமாவில் இருக்கும் ஈடுபாடும் தான் அவரை தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக வளர உதவியுள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது ஏராளமான படங்களில் கமிட்டாகி படு பிஸியாக நடித்து வருகிறார்.

பருத்திவீரன்
இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் திரைப்படம் தான் கார்த்தியின் முதல் படம் என்றாலும், முதல் படம் என்ற சுவடே தெரியாமல் நடித்திருப்பார். அந்த படத்தில் அவரின் தோற்றமும்... அவர் பேசும் ஸ்டைலும் அனைவருக்கும் பிடித்து விட்டது. அப்படத்தில் நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.

பல படங்களில்
அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார் கார்த்தி. சோழ வாரிசையும், பாண்டியர்களின் குலதெய்வச் சிலையையும் கண்டுபிடிக்க கிளம்பும் குழுவில் இருப்பவராக கார்த்தி அந்த படத்தில் நடித்திருப்பார். அதையடுத்து, பையா, நான் மகான் அல்ல, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா என பல படங்களில் நடித்தார்.

மாஸ் ஹீரோவாக
சிவா இயக்கத்தில் சிறுத்தை படத்தின் மூலமாக மாஸ் ஹீரோவாகவும் உருவெடுத்தார் கார்த்தி. டபுள் ரோலில் நடித்திருந்தார் அவர். மாஸான போலீஸ் அதிகாரியின் ரோல் ஒருபுறம், காமெடியான திருடன் ரோல் மறுபுறம் என இரண்டிலும் கலக்கி இருந்தார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் கார்த்தி. ஹெச் வினோத் அந்த படத்தினை இயக்கியிருந்தார். கார்த்தி கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படங்களில் இதுவும் ஒன்று.

கடைசியாக சுல்தான்
கைதி படத்தில் பல வருடங்கள் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவராக சற்று வயதான தோற்றம், மகளுக்காக ஏக்கும் அப்பா கேரக்டரிலும் மிரட்டி இருந்தார். கடைசியாக கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். இதில், அனைவரையும் வா சுல்தான்...வா சுல்தான் என பாடவைத்திருந்தார். இப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.

பொன்னியின் செல்வன் முடிந்தது
தற்போது ஏராளமான திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் கார்த்தி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கார்த்தி தன்னுடைய பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டதாக ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

சர்தாரில் நீண்ட முடியுடன்
அடுத்ததாக நடிகர் கார்த்தி, பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் கார்த்தி, நீண்ட தலைமுடி, நீண்ட தாடியுடன் வயதான தோற்றத்தில் தத்ரூபமாக நடிக்கிறார்.

விருமன் படமும் கைவசம்
அதேபோல டைரக்டர் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கார்த்தி நடிப்பதாக கூறப்பட்டது. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

கைதி 2
அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். இது மட்டுமில்லாமல் அருண்ராஜா மற்றும் காமராஜ் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்கு நடிகர் கார்த்தி ஒப்புக்கொண்டுள்ளார். இது மட்டுமில்லாமல் ஒரு சில இளம் இயக்குனர்களும் இவரிடம் கதை சொல்வதற்காக விடாமல் தொடர்ந்து துரத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கார்த்தி ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











