Actor Karthi: நட்பை நம்பி களமிறங்கும் 96 இயக்குநர்.. அட அதுக்குள்ள 75 % சூட்டிங் ஓவரா!
சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் 96 பட இயக்குநர் பிரேம்குமார் கூட்டணியில் உருவாகிவரும் படம் கார்த்தி 27. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் கார்த்தியுடன் அரவிந்த் சாமி இணைந்து நடித்து வருகிறார். அவர்தான் படத்தின் வில்லனாக நடித்து வருகிறார். பேமிலி சென்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் நாயகியாக பிரபல சீரியல் நடிகை சுவாதி கொண்டே முன்னதாக இணைந்திருந்த நிலையில் கார்த்திக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தில் ஸ்ரீதிவ்யா இணைந்துள்ளார்.
விஜய்சேதுபதி மற்றும் திரிஷா லீட் கேரக்டர்களில் நடித்திருந்த 96 என்ற உணர்ச்சிபூர்வமான படத்தை முன்னதாக கொடுத்திருந்த இயக்குநர் பிரேம்குமார், சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி 27 படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு மெய்யழகன் என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டுளள்து. கடந்த தீபாவளியையொட்டி வெளியான கார்த்தியின் ஜப்பான் படம் அவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் அடுத்ததாக நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இருவரின் இயக்கத்திலும் கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படங்களின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை குஷியாக்கி வருகின்றன. முன்னதாக விருமன், சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 என கார்த்தி நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் அவருக்கு வெற்றியை பரிசளித்தன. அவரது ரசிகளையும் உற்சாகப்படுத்தின. இந்நிலையில் ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான ஜப்பான் படம் சொதப்பியது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான இந்தப் படம அவருக்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் அடுத்தடுத்து இயக்குநர்கள் நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் டைரக்ஷனில் கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதிலும் 96 படத்தை இயக்கிய பிரேம்குமாரின் இயக்கத்தில் நடித்துவரும் கார்த்தி 27 படத்தின் சூட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை அவரது சகோதரர் நடிகர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். படத்தின் சூட்டிங் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
நட்பை நம்பி களமிறங்கும் இயக்குநர்: படத்தில் அரவிந்த் சாமி கார்த்திக்கு வில்லனாக நடித்து வருகிறார். தற்போது கும்பகோணத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 96 என்ற உணர்வுபூர்வமான கதையை கொடுத்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் பிரேம்குமார். அவரது கார்த்தி 27 படமும் அதேபோன்று ரசிகர்களை அதிகளவில் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் படத்தில் காதலை சிறப்பாக காட்சிப்படுத்திய பிரேம்குமார், இந்தப் படத்தில் நட்பை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார். முந்தைய படத்திலும அவர் நட்பை பிரதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக்கு ஜோடியான ஸ்ரீதிவ்யா: படத்தில் முன்னதாக பிரபல சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே கமிட்டானார். கார்த்திக்கு ஜோடியே இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் நாயகியாக ஸ்ரீதிவ்யா இணைந்துள்ளார். மேலும் படம் பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கிராமத்து மண்மணம் கமழும்படியான கேரக்டர்கள் என்றால் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போல இயல்பாக வரும். அந்தவகையில் கிராமத்து பின்னணியில் பேமிலி மற்றும் நட்பை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. படம் இந்த ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











