கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது… புதிய தகவல்!
சென்னை : நடிகர் கார்த்தி இப்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து ஹீரோ, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார்.
மே மாதம் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்டமாக
பெரும்பாலும் புது புது இயக்குனர்கள் உடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நடிகர் கார்த்தி இப்பொழுது முத்தையா மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையிலே கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிந்திக்க வைக்கும்
இரும்புத்திரை மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பிஎஸ் மித்ரன் முதல் படத்திலேயே அனைவரையும் சிந்திக்க வைக்கும் அட்டகாசமான படத்தை இயக்கினார். இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் மக்களின் பணம் டிஜிட்டல் வாயிலாக கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதை சுவாரசியம் குறையாமல் காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

வயதான தோற்றத்தில்
இப்பொழுது கார்த்தியின் நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தை இயக்கி வருகிறார். இதுவரை இளமைத் துள்ளலான கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்திருக்க இந்த படத்தில் முதல் முறையாக வயதான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு இரட்டை வேடம் எனக் கூறப்படுகிறது. கதாநாயகிகளாக கர்ணன் புகழ் ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

மீண்டும் துவங்கியுள்ளது
கார்த்தி வித்தியாசமான லுக்கில் இப்படத்தில் தோன்ற இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்க இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் துவங்கியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதை முடித்து விட்டு உடனடியாக பொள்ளாச்சியில் நடக்கும் பொன்னியன் செல்வன் படப்பிடிப்பில் 16ம் தேதி முதல் கார்த்தி கலந்து கொள்ள இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











