‘அந்தகன்‘ டப்பிங்கை தொடங்கிய நவசர நாயகன் கார்த்தி!
சென்னை : அந்தகன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. இதில் நவரச நாயகன் கார்த்திக் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மூடப்பட்டுள்ள திரையரங்குகள் திறந்தவுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாந்த்
90களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்திய திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் மகனாவார். இவர் தனது 17வது வயதில் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

முன்னணி நடிகர்
மேலும் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், ஆர்.கே செல்வமணியின் செம்பருத்தி உள்ளிட்ட பிற படங்களில் நடித்துள்ளார். ரெட்டியின் தோளி முத்து, மணிரத்னத்தின் அதிரடி நகைச்சுவை படமான திருடா திருடி, பிரசாந்த் ஷங்கரின் பிளாக் பஸ்டர் காதல் நகைச்சுவை படமான ஜீன்ஸ் மூலம் நட்சத்திரமாக உயர்ந்தார். மேலும் ஜீன்ஸ் படத்தின் மூலமாக அவருக்கு பெரிய வெற்றி திரைப்படங்களில் பணியாற்றுவதற்காக பல வாய்ப்புகள் வந்தது. மேலும் அவர் 1990-களின் பகுதியில் அவர் தொடர்ச்சியான முன்னேற்ற படங்களில் நடித்தார்.

அந்தகன்
இவர் சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் படமான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது பிரசாந்த் நடித்துள்ளார். மேலும் அந்தத் திரைப்படத்தை அந்தகன் என்று தமிழில் பெயரிடப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு முடிந்தது
இப்படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்கிறார் இவருடன் சிம்ரன், ப்ரியா ஆனந்த், வனிதா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

டப்பிங்கை தொடங்கிய கார்த்தி
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, படத்தின் அடுத்தக்கட்ட பணிகளான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நவரச நாயகன் கார்த்தி கலந்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கொரோனாவால் மூடப்பட்டுள்ள திரையரங்குகள் திறந்தவுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தாதூன் 3 தேசிய விருதை வென்றது
2018ம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். இந்தப் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.

தெலுங்கில் நிதின்
இப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் நிதின், தபு, நபா நடேஷ் உள்ளிட்டோர் நடிக்க மெர்லபாகா காந்தி இயக்கி வருகிறார். மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள், இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே வேதாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

மலையாளத்தில் ப்ரித்விராஜ்
அந்தாதூன் திரைப்படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











