பேச்சுலர் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் கார்த்தி!

சென்னை : கொம்பன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி தற்போது விருமன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

Recommended Video

Bachelor படம் இந்த Generation Youngters-கு, எல்லாரும் Accept பண்ணாங்க | Divya Bharathi Exclusive

இரும்புத்திரை, ஹீரோ என தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதை களத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துவரும் படத்திற்கு சர்தார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் அடுத்ததாக கார்த்தி பேச்சுலர் பட இயக்குனர் சதீஷ் செல்வகுமார் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில்

பிரம்மாண்ட பொருட்செலவில்

தமிழ் சினிமாவில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நடிகர் கார்த்தியை அடித்துக்கொள்ள முடியாது. கார்த்தி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் சொல்லி அடித்ததுபோல வெற்றிகளை பெற்று வருகிறது. கார்த்திக்கு கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக மூன்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வீரம் போற்றும் வந்தியத்தேவனாக

வீரம் போற்றும் வந்தியத்தேவனாக

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் வீரம் போற்றும் வந்தியத்தேவனாக நடித்து வருகிறார் மிகவும் பழமை வாய்ந்த தமிழ் வரலாற்று திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து இப்பொழுது பாடல்கள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் மணிரத்னம் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

அதை தொடர்ந்து கார்த்தி ஹீரோ, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனது ஒவ்வொரு படங்களிலும் அனைவரையும் யோசிக்க வைக்கும் பிஎஸ் மித்ரன் இந்த படத்திலும் வித்தியாசமான கதையை கையாண்டு வருகிறார். இந்த படத்திற்கு சர்தார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்து வருகின்றனர். கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இளமை தோற்றத்திலும் மற்றொன்று வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

ஷங்கரின் மகள் அதிதி

ஷங்கரின் மகள் அதிதி

கொம்பன் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு விருமன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகிறார் .

பேச்சுலர் இயக்குனருடன் கூட்டணி

பேச்சுலர் இயக்குனருடன் கூட்டணி

விருமன், சர்தார்,பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்தி இயக்குனர் சதீஷ் செல்வகுமார் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் . பேச்சுலர் திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சதீஷ் செல்வகுமார் முதல் படத்திலேயே சிக்சர் அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் கார்த்தியிடம் சதீஷ் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதால் இப்படத்தின் திரைக்கதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X