Actor Karthi: கார்த்தி -பிரேம்குமார் பட தலைப்பு அப்டேட்.. ஹேண்ட்சம் லுக்கில் கலக்கல் கார்த்தி!
சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பிரேம்குமார் கூட்டணியில் உருவாகிவரும் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன், சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான ஜப்பான் படம் விமர்சனங்களிலும் வசூலிலும் சொதப்பலாகவே அமைந்தது.
இந்நிலையில் அடுத்தடுத்து நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோரின் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் முன்னதாக 96 படத்தை கொடுத்த பிரேம்குமார் இயக்கத்தில் தன்னுடைய கார்த்தி 27 படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார் கார்த்தி. இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் கார்த்தியின் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பிரெண்ட்ஷிப்பை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகிவருகிறது. படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த சிறப்பான வெற்றிகளை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்கள் கார்த்தி நடிப்பில் வெளியான நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் சிறப்பாக கைக்கொடுத்தது. மல்ட்டி ஸ்டாரர் படமாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலையொட்டி வெளியான இந்தப் படத்தின் முதல் பாகமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் கார்த்தியின் நடிப்பு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த தீபாவளியையொட்டி வெளியான ஜப்பான் படம் கார்த்திக்கு கைக்கொடுக்கவில்லை.

அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் தற்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் படங்களில் நடித்துவருகிறார் கார்த்தி. இதில் முன்னதாக 96 படத்தை கொடுத்த பிரேம்குமார் இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை கார்த்தியின் சகோதரரும் பிரபல நடிகருமான சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருகிறது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்வாதி கொண்டே நடித்து வருகிறார். மேலும் படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்து வருகிறார்.
மெய்யழகன் ஆகும் கார்த்தி?: கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போது அதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்திற்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் லுக்குடன் தற்போது கார்த்தி புதிய போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் ஸ்மார்ட்டான கார்த்தியை பார்க்க முடிகிறது. விரைவில் டைட்டில் அப்டேட்டுடன் கார்த்தி 27 படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 6 ஆண்டுகள் கழித்து பிரேம்குமார் இயக்கும் இந்தப் படம் அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வில்லனாகும் சூழ்நிலை: கார்த்தி 27 படம் குடும்ப சென்டிமெண்ட்டையும் மையமாக வைத்து உருவாகிவருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஜ்கிரண் கார்த்தியின் பெரியப்பாவாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தஞ்சை மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 96 படத்தை போலவே சூழ்நிலையை வில்லனாக மாற்றி பிரேம்குமார் கதைக்களத்தை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் 96 படத்தை காட்டிலும் சிறப்பான கதைக்களத்தை கொண்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











